Feb 13, 2013

காதலிக்க நேரமில்லை!

பிப் 14/2013: காதல் ஒரு பருவகால உந்தல். பருவ வயதை அடைந்த ஆண்,பெண் ஒருவேர்மேல் ஒருவர் கொள்ளும் ஈர்ப்பே காதல்.

ஒருவர் மேல் காதல் உண்டாக அழகு என்கிற புற தோற்றங்களோ அல்லது அறிவு சார்ந்த கல்வி, வீரம், விவேகம், சமூக சிந்தனைகள் போன்ற அக தோற்றங்களோ ஒரு காரணமாக இருக்கலாம்.

தனது மனதுக்கு  பிடித்தவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் காதலின் கடைசி இலக்காக இருக்கிறது. அதாவது காதல் என்பதின் கடைசி இலக்கு திருமணமே.

ஒவ்வொருவருக்கும் வாழ்நாளில் எதாவது ஒரு காலத்தில், காதல் அனுபவம் வந்து சென்றிருக்கும். காதல் பருவ வயதில் ஏற்ப்படும் சுகமான அனுபவம். காதல் என்றால் செல்போன் காதல் என்று நினைத்து விடாதீர்கள். நாம் பருவ வயதை கடந்து வரும்போது நமது மனதுக்கு யாரையாவது பிடிக்கும்.

ஆனால் நீங்கள் அவர்களோடு பேசி இருக்க கூட மாட்டீர்கள். இயல்பாகவே உங்கள் மனதுக்குள் ஒரு எண்ணம் தோன்றும் இவரை திருமணம் செய்தால் நலமாக இருக்கும் என்று மனம் எண்ணும். இதுபோல் உள்ள சிறு சிறு விஷயங்கள் தொடங்கி ஒருதலை காதல் முதல் ஒருதடவை பார்த்த காதல்வரை ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் காதல் அனுபவம் ஏற்ப்பட்டிருக்கும்.

சங்ககால காதல் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வதோடு முடிந்து விடும். கண்களாலேயே பேசிகொள்வது ஏதாவது திருமணம், பண்டிகைகள் என்று பொது விசயங்களில் சந்தித்து கொள்வது என்பதோடு சரி. அன்றைய காலத்தில் காதல் என்பது உடல் சார்ந்த ஒரு விசயமாக இல்லாமல் மனம் சார்ந்த விசயமாக இருந்தது. காதல் என்றால் அன்பு, நேசம், பாசம் என்று ஒரு வரையறைக்குள் இருந்தது.

ஆனால் இன்றோ நிலைமை வேறு ஒரு  நாளைக்கு ஒரு காதல் என்று பாஸ்ட் புட் வேகத்தில் இருக்கிறது. இந்த காலத்து  காதல்களில் பெரும்பான்மை உடல் கவர்ச்சியாலே வருகிறது. இன்று காதல் என்பது முக கவர்ச்சியில் தொடங்கி காமத்தில் முடிந்து விடுகிறது. காதலித்து திருமணத்திற்கு பின்னால் நடக்க வேண்டிய விஷயங்கள்  திருமணத்திற்கு முன்னாள் நடப்பதால் பெருன்பான்மையான காதல்கள் கானல் நீராகிப்போகின்றன.

இப்படிப்பட்ட காதல்கள் உருவாக ஒரு வகையில் தாய் தந்தையர்களும் ஒரு காரணம் என்றே சொல்லலாம். காதல் என்பதன் முடிவு திருமணம் என்றிருக்க சொந்தம் விட்டு போக கூடாது, பணம், புகழ் போன்றவற்றிக்கு ஆசைப்பட்டு தகுதியில்லாத திருமணங்களை  பெற்றோர்கள் முடித்து வைப்பதின் விளைவே இந்த கண்டதும் காதலின் அஸ்திவாரம்.  இன்றைய இளைய தலைமுறையினர்  காதல் செய்து திருமணம் செய்து கொண்டால்தான் சந்தோசமாக வாழமுடியும் என்று எண்ணுவதற்கு பெற்றோர்கள் அதிமுக்கிய காரணியாக அமைந்து விட்டார்கள்.

திருமணம் முடிக்கும் முன் மணமக்களிடம் சம்மதம் கேட்பது என்பது ஒரு சடங்காகவே நடத்தப்படுகிறது.  அந்த பையனின், பெண்ணின் மனதில் என்ன விருப்பம் இருக்கிறது என்று அறிந்து கொள்ள யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பெற்றோர்களால் நிச்சயக்கப்படும் திருமணங்களில் ஏற்ப்பட்ட தோல்வியே இந்த கண்டதும் காதல் கலாச்சாரத்தை உருவாக்கியது. இன்றைய பிள்ளைகள் பெற்றோர்களை இந்த விசயத்தில் நம்பத் தயாராக இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

மற்றபடி பிப் 14  இல்  காதலர் தினம் கொண்டாட்டங்களை உருவாக்கியது  நமது கார்பெரெட் முதலாளிகளே. இப்படி ஒரு குறிப்பிட்ட தினத்தை மேலைநாடுகளில் உண்டாக்கி அதன் மூலம் மக்களின் பொருளாதாரத்தை சுரண்டுவதே இவர்களது எண்ணம். காதலர் தினம் என்பது கார்பரேட் முதலாளிகளின் தினமே. உலகின் பலபகுதிகளில் மக்கள் உணவில்லாமல் பட்டினியில் சாகும் போது இதுபோன்ற கேளிக்கைகள் அவசியமற்றதே. மற்றபடி காதல் என்கிற ஒரு சுகமான உணர்வுக்கு, ஒரு ( காதலர்) தினம் எடுத்து அதையும் செயற்கை ஆக்கவேண்டாமே.

நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல். 

6 comments:

Easy (EZ) Editorial Calendar said...

மிக மிக சரியாக சொன்னிங்க.....பகிர்வுக்கு மிக்க நன்றி......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Unknown said...

தனது மனதுக்கு பிடித்தவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் காதலின் கடைசி இலக்காக இருக்கிறது

DEVADAS said...

KATHAL ENPATHU ORU KAVARCHY. ITHIL PASAM PINNAPADUVATHILLAI.

DEVADAS said...

KATHAL ENPATHU ORU KAVARCHY. ITHIL PASAM PINNAPADUVATHILLAI.

DEVADAS said...

KATHAL ENPATHU ORU PARUVA KAVARCHY. ULLAM ONRUPATAL THIRUMANAM. ITHUTHAN NULLA MUDIVU.

DEVADAS said...

KATHAL ENPATHU ORU PARUVA KAVARCHY. ULLAM ONRUPATAL THIRUMANAM. ITHUTHAN NULLA MUDIVU.