Jan 23, 2013

குடியரசை காப்பாற்றுவோம்! தேசிய அளவில் பிரச்சாரம்!

Dec 23: ஃபாசிசத்தை தடுப்போம்! குடியரசை காப்பாற்றுவோம்! என்ற முழக்கத்தை முன்வைத்து வருகிற ஜனவரி 26-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் பிரச்சாரம் நடத்த உள்ளது.

இதுத் தொடர்பாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பாசிச சக்திகள் இந்திய குடியரசை தகர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளன. தேசத்தின் ஆன்மாவின் மீது ஆர்.எஸ்.எஸ் நடத்திய முதல் தாக்குதல்தான் காந்தி படுகொலை. ஜனநாயகம் மற்றும் மதசார்பற்ற கொள்கைக்கு எதிராக மிரட்டல் விடுக்கிறது ஆர்.எஸ்.எஸ். 

ஏராளமான வகுப்புவாத கலவரங்களின் மூலம் ஆர்.எஸ்.எஸ் ஆயிரக்கணக்கான முஸ்லிம், தலித், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை கொலைச் செய்துள்ளது.12க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகளை இவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் நடத்தியுள்ளனர். தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கதான் என்ற மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் அறிக்கையில் உள்ளார்ந்த நேர்மை இருந்தால் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம்களை விடுதலைச் செய்யவேண்டும். காந்தி படுகொலையில் குற்றவாளியான சாவர்க்கரின் போட்டோவை பாராளுமன்றத்தில் இருந்து அகற்றவேண்டும்.

குடியரசு தினமான ஜனவரி26-ஆம் தேதி கொல்கத்தாவில் நடக்கும் தேசிய கருத்தரங்கில் இருந்து தேசிய பிரச்சாரம் துவங்கும். ஜனவரி 30-ஆம் தேதி சென்னையில் காந்திசிலை அருகே பிரச்சாரத்தின் இறுதி நிகழ்ச்சி நடைபெறும். பிரச்சாரத்தின் போது பாசிச எதிர்ப்பு உறுதிமொழி, கல்வி வளாகங்களில் மாணவர் விழிப்புணர்வு, கல்வி வளாக சந்திப்பு, மாணவர் பேரணி, கையெழுத்து சேகரிப்பு ஆகியன நடைபெறும்