Sep 7, 2012

WHO IS THE HERO! WHO IS THE HERO! காக்க வந்த வாத்தியாரோ!

Sep 08: சிவகாசி  அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த, 40 பேருக்கு, இலவச ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்கு, நடிகர் மம்முட்டி ஏற்பாடு செய்துள்ளார். 

இந்த சிகிச்சைக்கு ரூபாய் 25 லட்சம் செலவாகும்மலையாள நடிகர்  மம்முட்டியை பாராட்டியே ஆகவேண்டும். நம்ம தமிழ்நாட்டு நடிகர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. 

கும்பகோணம் தீவிபத்தில் பலியான பள்ளி குழந்தைகள் குடும்பங்களுக்கு நிதி வழங்குவதாக அறிவித்த நமது நடிகர்கள் பலர் மாயமானார்கள். தலைவா உன் சொல்லுக்காக தமிழகமே காத்து நிற்கிறது என்று மிகைபடுத்தப்பட்ட ரஜினி என்ன செய்தார்? மற்ற நடிகர்கள் எல்லாம் எங்கே?  இதுபோன்ற பெரும் விபத்துகளிலும், பேரிடர்களிலும் இந்த நடிகர்களின் பங்கு என்ன?

சிடி பிளையர் வாங்க வசதியில்லாத இந்த அன்றாடம் காட்சிகள் தியேட்டரில் சென்று படம்பார்த்துதானே நீங்கள் எல்லாம் வாழ்கிறீர்கள். ஒரு மனிதனுக்கு 5 கார், 10பங்களா, ஒரு தலை முறைக்கு சொத்து இதல்லாம் போதும் தானே. இது போக மீதத்தையாவது மக்களுக்கு கொடுங்கலேண்டா! ஏன் இந்த பணவெறி.. பணவெறி.. பணவெறி டா!. 

இந்த கம்பம் கலி தின்னவனும் மண்ணுக்குள்ளே! அந்த தங்க பஷ்ப்பம் தின்னவும் மண்ணுக்குள்ளே!  நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல!  

இது ரஜினி காந்த் படத்தில் வைரமுத்து எழுதிய பாடலை இவர்தான் முணு முணுப்பார். நம்ம விசிலடிச்சான் குஞ்சிகள் எல்லாம் ஓ.. தங்க தலைவா! வருங்கால தமிழக முதல்வரே! என்று கோசம் எழுப்புவார்கள். இதில் வேடிக்கை என்ன வென்றால் ரஜினி ரசிகர்கள்  கட்டவுட்டுக்கு பாலை ஊற்றி அபிசேகம் செய்வர். ஆனால் தமிழ்நாட்டில் எத்தனை பச்சிளம் குழந்தைகளுக்கு பால்வாங்க  வழியில்லாமல் தாய்மார்கள்   அவதிப்படுகிறார்கள். 

பாரதியும், பெரியாரும் வாழ்ந்த மண்ணில் மானம் கெட்டு குஷ்புக்கு கோவில் கட்டிய ரசிக பெருமக்கள்தானே. குஷ்பு தன்னை போலவே எல்லோரும் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ் நாட்டு பெண்களின் கற்ப்பை பற்றி பேசி சர்ச்சை உண்டாக்கினார். இந்த  குஷ்பு கடவுள் இந்த மக்களுக்கு ஏதாவது பண்ண போறாரா? இல்லையே! இதையெல்லாம் சிந்திக்க கூட வழியில்லாமல் நமது தமிழ் சமூகம் அடிமுட்டாளாகி போனது.
சினிமாவை பற்றியே செய்திகள் எழுதி சமூக வலைத்தளங்களை நாறடிக்கும் மக்கள் திருந்துவார்களா?
*மலர்விழி*

6 comments:

Seeni said...

sariyaana seruppadi!

en valaiyil-

narakaasuran....!

intraya pathivu!

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொரு பத்தியும் சாட்டையடி வரிகள்...

என் பதிவில் தவற்றை சுட்டிக் காட்டியதற்கு நன்றி... மாற்றி விட்டேன்... பல பாடல்களை யோசித்து, அந்தப் பாட்டிற்கு ஏற்ற மாதிரி தான் எதிர்ப் பாட்டாக அந்த பாட்டை சேர்த்தேன்... (உளறித் திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது...) Anyway Thanks...

Anonymous said...

Tamil actor galumku sariyaana seruppadi..... Good article

PUTHIYATHENRAL said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களும் நன்றி தோழர் சீனி அவர்களே.

PUTHIYATHENRAL said...

வணக்கம் திண்டுக்கல் பாலன்.... யாருடைய மனதும் புண்படும்படி எழுத வேண்டும் என்பது நோக்கம் அல்ல. தவறை ஏற்று கொள்ளும் மனோபாவம் எத்தனை பேருக்கு உண்டு. விமர்சனகளை எதிகொள்வதும் தவறை திருத்தி கொண்டேன் என்று பகிரங்கமாக சொல்வதும் சிறந்த பண்பு. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

Anonymous said...

Wathoyarai kurai sollum vealai vendaam