May 14, 2012

கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு தீர்ப்பாயம் இன்று!!


சென்னை: சென்னை லயோலா கல்லூரியில் கூடங்குளம் அணு உலை குறித்த பொது விசாரணை இன்று நடைபெறுகிறது.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரையில் மே முதல் தேதி தொடங்கி நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 14வது நாளாகத் தொடர்கிறது.

இந்த நிலையில், கூடங்குளம் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாடு பற்றி, லயோலா கல்லூரியில் மக்கள் தீர்ப்பாயம் ஒன்று விசாரணை நடத்துகிறது.

காலை 9 மணிக்குத் தொடங்கும் இந்த விசாரணையில், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஷா, போராட்டக் குழு தரப்பில் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் மற்றும் சுவாமி அக்னிவேஷ் உட்பட கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் பங்கேற்கின்றனர்.

இந்த பொது விசாரணையில், அணு உலை நிர்வாக செயல்பாடுகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் காவல்துறையின் அச்சுறுத்தல்கள் பற்றி அப்பகுதி மக்கள் ஆதாரங்களுடன் பதிவு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு, மக்கள் தீர்ப்பாயம் நடத்தும் பொதுவிசாரணையில் நல்ல முடிவு கிடைக்கும் என போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1 comment:

Seeni said...

nalla niyaayam kidaikkumaa!?

poruthirunthu paarppom!