May 12, 2012

தீவிரவாதத்தை மறைக்க பாடுபடும் மோடி அரசு!?


அஹ்மதாபாத் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு அளித்த அறிக்கையில் முதல்வர் நரேந்திர மோடி தொடர்பான தனது புகார் குறித்த முக்கிய ஆவணங்கள் இல்லை என்று ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி அஹ்மதாபாத் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.

கடந்த திங்கள்கிழமை சிறப்புப் புலனாய்வுக் குழு தம்மிடம் தந்த அறிக்கையில் இடம்பெறாத 18 ஆவணங்களை மாஜிஸ்திரேட் எம்.எஸ். பட் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ஸாகியா பட்டியலிட்டுள்ளார். இந்த மனுவை அவரது வழக்குரைஞர் சாதிக் ஷேக் தாக்கல் செய்தார்.
சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அதிகாரி ஏ.கே. மல்ஹோத்ரா 2010-ம் ஆண்டு மே 12-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முதல்நிலை அறிக்கை, குழுவின் பிற அறிக்கைகள், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் ஆ.கே.ராகவனின் 14.05.2010ம் தேதியிட்ட ஆவணம் ஆகியவை ஸாகியா ஜாஃப்ரி குறிப்பிட்டிருக்கும் ஆவணங்களில் அடங்கும்.
“சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையுடன் சில சி.டி.க்களும் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றின் ஒலிப்பதிவைக் கேட்க முடியவில்லை. சில ஆவணங்களின் நகல்கள் படிக்க முடியாதவாறு இருக்கின்றன” என்று ஸாகியாவின் வழக்குரைஞர் புகார் தெரிவித்தார்.
இந்தப் புகார்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் வழக்குரைஞர் ஆர்.எஸ்.ஜமுவார், “இறுதி அறிக்கை மற்றும் ஸாகியாவின் புகாருக்குத் தொடர்புடைய ஆவணங்களை மட்டுமே அவரிடம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என்றார்.
“இப்போது ஸாகியா கோரியிருக்கும் ஆவணங்களில் பெரும்பாலானவை, சீலிடப்பட்ட உறையில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகி அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஸாகியா தரப்பில் கூறப்படும் சி.டி.க்களின் அசல் சி.டி.க்கள் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் இருக்கின்றன. வேண்டுமெனில் மனுதாரர் அதைப் பரிசோதிக்கலாம்” என்றும் ஜமுவார் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட், வரும் 19-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில், நரேந்திர மோடிக்கும், அவரது அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பதாக ஸாகியா குற்றம்சாட்டியிருந்தார். இதை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு மோடி மீது குற்றம் சாட்ட ஆதாரமில்லை என்று கூறுகிறது.
எனினும் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நியமித்த அமிக்கஸ் க்யூரியான ராஜூ ராமச்சந்திரன், “இனங்களுக்கு இடையே பகையை உருவாக்கினார்” என்ற குற்றச்சாட்டின் கீழ் மோடி மீது விசாரணை நடத்தலாம் என்று கூறியிருந்தார்.

2 comments:

தமிழ் மீரான் said...

தகவல்களுக்கு நன்றி!

Seeni said...

neethi nilai perumaa!?