Apr 25, 2012

வருங்கால இந்தியாவின் தலைவர்கள் அணிவகுக்கும் பேரணி!

April 26: உலகில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் பலஸ்தீனில் செய்யும் அக்கிரம்மங்களுக்கு அளவே இல்லை.

பலஸ்தீனில்  பிஞ்சு குழந்தைகளை கொன்று குவித்து வருவதோடு பாலஸ்தீனியர்களை  அவர்களது சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கி சிறைவைத்துள்ளது.

தன்னை சுற்றி உள்ள நாடுகளை அணு ஆயுதங்களை கொண்டு மிரட்டியும் வருகிறது. இஸ்ரேலிய உளவு அமைப்பு இந்தியாவில் ஊடுறுவி ஹிந்துத்துவா சக்திகளுக்கு வலு சேர்த்து வருகின்றனர்.


இப்படிப்பட்ட  இஸ்ரேலுடனான எல்லா உறவையும் மத்திய அரசு கைவிடவேண்டும் என்பதை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உட்பட பல இயக்கங்கள்  ஒன்றினைத்து "மூவ்மென்ட்ஸ் ஃபார் சிவில் ரைட்ஸ்" என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம்  ஏப்ரல் 26 காலை 10 மணிக்கு பாராளுமன்றம் நோக்கி பேரணி நடத்த இருக்கின்றது.

இஸ்ரேலுடனான உறவு தேசத்திற்கும் மிகப்பெரும் ஆபத்தை உண்டாக்கும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கிறது இப்பேரணி, அத்தோடு இந்தியாவில் தீவிரவாதம் என்கிற பெயரில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுவதையும் கடுமையாக கண்டிக்கிறது இப்பேரணி.

சமீபத்தில் புதுடெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பிற்கு பிறகு இஸ்ரேல் எவ்வாறு பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட்டு வருவதை நம்மால் காண முடிகிறது. இஸ்ரேலின் தூண்டுதலினால் மூத்த பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டதை பார்க்கும் போது இந்தியாவில் ஜியோனிஸ சக்திகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ஒடுக்க வேண்டும் என்ற ரீதியிலேயே இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

தொன்று தொட்டு அரபு நாடுகளில் இந்திய மக்கள் வேலை செய்து பல்லாயிரம் கோடி அந்நிய செலவாணியை இந்தியாவுக்கு கொண்டு வருகின்றனர். அப்படி இருக்கும் அரபு நாடுகளுக்கு இந்தியாவில் இருக்கும் தூதரகங்கள் விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால் எந்த வகையிலும் நமது இந்திய மக்களுக்கு பயன்தராத இஸ்ரேலுக்கு இந்தியாவில் இரண்டு இடங்களில் தூதரகங்கள் தேவையா?

3 comments:

Anonymous said...

பல விஷயங்களை அறிய முடிந்தது

தமிழ் மணம் 3

Unknown said...

நியாயமான வாதம்! நிதானமான எழுத்துக்களில்! இறுதிப் பாரா உன்மையின் உறைகல்!
இதேப் போல அனைத்து கட்டுரைகளும் தொடர வாழ்த்துக்கள்!

Seeni said...

good msg!

good work!

insha allah!
we can-
win!