Dec 23, 2011

கொலைகாரர்களின் போராட்டம்!

DEC 24: ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் டாக்டர்கள் துவங்கியிருக்கும் காலவரையற்ற போராட்டத்தினால் 10 நோயாளிகள் முறையான சிகிச்சை இல்லாமல் உயிரிழந்திருக்கின்றனர்.

ராஜஸ்தான் டாக்டர்கள் பல ஆண்டு காலமாக பதவி உயர்வுக்காக காத்திருப்பதாகவும், சம்பள விகிதாச்சாரம் போதாது என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அரசு ஆஸ்பத்திரியை நம்பி வரும் ஏழை நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக விபத்துக்களில் சிக்கி வருவோர் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இந்த போராட்டத்தில் சுமார்  10ஆயிரம் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சிந்திக்கவும்: உலகிலேயே டாக்டர் தொழில் செய்பவர்கள் மாதிரி பணம் சம்பாதிப்பவர் வேறுயாரும் இருக்க முடியாது. முன்னொரு காலத்தில் வைத்தியர்கள் மருத்துவம் செய்வதை மக்கள் தொண்டாக நினைத்தார்கள். இப்போது மருத்துவத்துறை என்பது கொள்ளைகாரர்களின் கூடாரமாகி விட்டது.  மக்கள் தொண்டு என்பது மறுவி பெரும் வியாபாரமாகி போனது.

சம்பளம் போக அரசின் மாத்திரை, மருந்துக்களை வெளியே விற்ப்பது, தனியாக கிளினிக் வைத்து நடத்துவது என்று சம்பாத்தியம் 'களை" கட்டும் இவர்களே போராட்டம் என்று குதித்தால் அன்றாடம் கூலி வேலை செய்யும் மக்களின் நிலைமையை என்னவென்று சொல்வது. எந்தவிதமான குற்ற உணர்வும் இல்லாமல் கோஷம் போடுவதை பாருங்கள் இவர்கள் டாக்டர்களா? இல்லை கொலைகாரர்களா? இவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
 ரௌத்திரம் பழகு 
...யாழினி...

7 comments:

வலையுகம் said...

சகோதரி யாழினி அவர்களுக்கு
உங்களின் சமூக கோபம் நியாயமானது

மருத்துவ துறை என்பது சேவைத்துறையை சார்ந்தது அதனை வியாபரமாக்கி கையை பார்க்கும் முன்னே பையை பார்க்கிற மனநிலை கொண்டவர்களாக இன்றைய மருத்துவர்கள் உருவாக்கப் படுகிறார்கள்

இதனால் பாதிக்கப் படுகிறவர்கள் ஏழைகள் தான் என்று நினைக்கும் போது மனது வலிக்கிறது சகோ

பகிர்வுக்கு நன்றி

நிவாஸ் said...

ஒரு சீட்டுக்கு இருபதுலச்சம் இருப்பத்தைந்து லட்சம் என்று கொடுத்து படிப்பவர்களிடம் தொண்டு மணப்பான்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்

இதுகூட பரவாயில்லை, படிப்பை முடிக்க ஒரு ஆறுமாதம் கிராமப்புறங்களில் பயிற்சி செய்வாய் செய்யுங்கள் என்று சொன்னதற்கு வந்ததே கோபம் இவர்களுக்கு, அப்பப்பா.............

இது நமது இந்தியா
நாம் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்


நல்ல பதிவு யாழினி

புனிதப்போராளி said...

ஏ௧ இறைவன் காக்கட்டும் ....டாக்டர்களா இவர்கள் வெள்ளை உடையணிந்த கொலைகார கும்பல் நாட்டில் தண்ணீருக்காக மக்கள் அல்லல் படும் போது ஏழைகளின் ரத்தம் குடிக்கும் டாக்டர்மிருகங்கள் இவர்கள் அணை விவகாரம் :அரபுலகில் பாதிக்கும் தமிழர்கள்!கடந்த சில தினங்களாகவே அனைத்து மீடியாக்களும் முல்லை பெரியாறு பிரச்னையை பகிர்ந்து கொண்டு வருகின்றன.
கேரளா வாழ் தமிழக மக்களை தாக்குவதும் தமிழகத்தில் இருக்கும் மலையாளிகளின் கடை மற்றும் உடமைகளை தாக்குவதும் அரங்கேறி வருகின்றன.சூழ்நிலை இப்படி இருக்க வளைகுடா நாடுகளில் மலையாளிகள் ஆதிக்கம் அதிகம் உள்ள துபாய், சவூதி, கத்தார் போன்ற நாடுகளில் பெரும்பாலான நிறுவனங்களில் உயர் பதிவிகளில் மலையாளிகள் தாம் உள்ளனர் .

மொழி வெறியர்களான மலையாளிகள் அவர்களுக்கு கீழ் வேலை செய்யும் தமிழர்களை பழிவாங்குவதாக பரவலான செய்திகள் வந்துகொண்டுள்ளன .

கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னையை நசுக்குவதற்க்காவும் மத்திய அரசும் மாநில அரசும் கரம் கோர்த்து இந்த நீண்ட நாளை பிரச்னையை ஏதோ நேற்றுதான் உருவானது போல் இரு மாநில அரசுகளும் கங்கணம் கட்டிக்கொண்டு மல்லுக்கு நிர்ப்பது இருமாநில ஒற்றுமைக்கு வேட்டு வைப்பதுபோல் ஆகிவிடும்.

இதனால் பாதிக்கபடுவது அச்சுதானந்தனோ , ஜெயலலிதாவோ அல்ல பிழைப்புக்காக கடல் தாண்டி சென்றிருக்கும் நமது சொந்தங்கள் தான்.

வலையுகம் said...

மிஸ்டர் புனிதப் போராளி

வஞ்சக புகழ்ச்சி அணியிலிருந்து வந்தது மாதிரி தெரிகிறது.

உங்களுடைய புன்னூட்டம் செந்தமிழர்கள் இன்னுமா சும்மா இருக்கிறார்கள் என்று தினமலர் தலையங்கம் வைத்து செய்தி எழுதியது போல் இருக்கிறது.

Anonymous said...

சேவைகளை முன்னிறுத்தி உருவான எல்லா தொழில்களுமே இன்று பொருளாதாரத்தை மையமாக வைத்துத்தான் நடத்தப்படுகிறது. பொருளாதாரம்தான் எல்லாத்துக்கும் அடிப்படை. ஆனால் அதற்காக செய்யப்படும் சூழ்ச்சிகளும், தவறான அணுகுமுறைகளும் பொது மக்களை நடமாடும் பிணங்கள் ஆக்கும் அல்லது பலகீனமான மக்களை பிணங்களாகவே ஆக்கிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வைத்தியத்துறையின் முறைகேடுகளால், காலாவதியான மருந்துகளை உட்கொண்டு அற்ப ஆயுளில் மோட்சம்(?) அடைந்த மக்கள்.

வைத்தியர்களின் பேராசையால் அவர்களின் கூட்டுக் கொள்ளையால், மருந்து கம்பெனிகள் கொடுக்கும் எச்சில் காசுக்கு ஆசைப்பட்டு, அவர்களின் மருந்துகளை ப்ரொமோட் செய்கிறேன் பேர்வழி என்று சரியான அனுமதி பெறாமல் மக்களின் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் COMPONENTS PROPORTION அதிகமாக இருந்தாலும் அதை அனுமதிப்பது. உதாரணமாக : 60 சதவிகித இந்திய மருந்துப் பொருள்களில் மயக்க மருந்து கலவை அதிகமாக இருப்பதும் அதனால் ஏற்படும் சென்ட்ரல் நெர்வ் பாதிப்பும் இவர்களுக்கு தெரிந்திருந்தாலும் அதை கண்டு கொள்ள அரசும் அக்கறை செலுத்துவதில்லை.

பெண்கள் உபயோகிக்கும் கருத்தடை மாத்திரைகளின் விஷத்தன்மையின் காரணமாக மேலை நாடுகளில் தடை செய்யப்பட மாத்திரைகள் இங்கு நம் நாட்டில் தாராளமாக பயன்படுத்துகிறார்கள். இதனால், கற்பப்பை கோளாறுகள், சம்பந்தமில்லாமல் தொடரும் மாதவிடாய் பிரச்சினைகள், கர்ப்பப்பை கட்டிகள், அளவுக்கு அதிகமான MISCARRIAGES என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

அரசு மருத்துவமனைகளில் அரசு கொடுக்கும், மருத்துவ உபகரணப் பொருட்களை, மருந்துகளை பெற்றுக்கொண்டு அதை தனியார் மருத்துவ மனைகளுக்கு விற்று காசு பார்ப்பது என்று ஒன்றா, இரண்டா இவர்கள் செய்யும் செய்யும் அட்டூழியம்?

இதற்கெல்லாம் அடிப்படை காரணம்: பல லட்சங்களை DONATION ஆக பெற்றுக்கொண்டு விரல் நீட்டிக்காட்டும் மடையர்களுக்கு சீட்டு வாங்கிக்கொடுக்கும் அரசியல்வாதிகளும், மெடிக்கல் காலேஜ் நிர்வாகங்களும்தான். இந்த வழியில் படித்து வந்தவர்களுக்கும், செலவு செய்து அரசியலுக்கு அரசியல்வாதிகள்போல் பணம் சம்பாதிக்காமல் வேறு என்ன செய்வார்கள்.

நல்ல மருத்துவர்களின் பண்புகளையும் அவர்கள் அனுபவிக்கும் அல்லல்களையும் நாம் மறக்காமல் பதிவு செய்யவேண்டும்: குறிப்பாக எத்தனையோ மருத்துவ மனைகளில், பல வருடங்களாகியும் மராமத்து பனி நடைபெறாமல், மழையில் ஒழுகும் கூரைகள், போதுமான அளவு துப்புரவு பணியாளர்கள் இல்லாமல் அவதிப்படும் மருத்துவ மனைகள், மருத்துவர்கள், லோக்கல் ரவுடிகளின் அடாவடித்தனத்தால் சிரமப்படும் மருத்துவர்கள், முறையான போக்குவரத்து இல்லாமல் பாதிக்கப்படுவது, சரியான கால இடைவெளிக்குள் அவர்களின் ஊதிய உயர்வுகளையும் முறையாக வழங்குதலும் கவனிக்கப்படவேண்டிய விடயங்கள் என்பதையும் கட்டுரை ஆசிரியர் பதுவு செய்திருக்கலாம்.


THAMEEM

புனிதப்போராளி said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ......ஏ௧ இறைவன் ---சகோ .. ஹைதர் அலி உங்கள் மீது நல்லருள் புரியட்டும் ..வஞ்சக புகழ்ச்சி அணியிலிருந்து வந்தது மாதிரி தெரிகிறது.
உங்களுடைய புன்னூட்டம் செந்தமிழர்கள் இன்னுமா சும்மா இருக்கிறார்கள் என்று தினமலர் தலையங்கம் வைத்து செய்தி எழுதியது போல் இருக்கிறது [மன்னிக்கவும் உங்களின் புரிதல் தவறானவையாக இருக்கிறது]...by ..புனிதப்போராளி..

மலர்விழி said...

தேவையான அளவுக்கு பணமும், வசதிகளும் உள்ள இவர்கள் மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் போராட்டம் என்று குதித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால் இன்னும் எத்தனை ஏழை எளிய மக்களின் உயிர் போக போகிறதோ வருத்தமாக இருக்கிறது. வசதி உள்ளவன் எல்லாவற்றிலும் இருந்து தன்னை தற்காத்து கொள்வான். ஏழைகளின் நிலைமையோ அதோ கதிதான். இந்த வெள்ளை உடை வேடதாரிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.