Dec 19, 2011

எதிரிகளுக்கு புரியும் மொழியில் பேசுங்கள்!

DEC 20: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தேனியில் வேன் டிரைவராக இருந்த ஜெயப்பிரகாஷ் தீக்குளித்தார்.

கேரள அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு அவர் தீக்குளித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தன்மானத்தையும், வீரத்தையும் இழந்த ஒரு  இனத்திற்காக மீண்டும் ஒரு உண்மை தமிழன் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்து விட்டான். வரலாற்று ரீதியாக தமிழர்கள் வீரமும், தன்மானமும் மிக்கவர்கள். அப்படிப்பட்ட ஒரு இனத்திற்கு என்ன நிகழ்ந்தது.

வந்தேறி பிராமணர்கள் தமிழர்களின் வீரத்தை, சூடு, சுரணையை ஒற்றுமையை மதவாதம், போலி தேசபக்தி   ஆகியவற்றை  பல்லாண்டுகளாக தங்கள் மீடியாக்கள் வழியாக பரப்புரை செய்து மலுங்கடித்தனர்.

இதனால் தமிழர்களுக்கு தங்களது வரலாறு தெரியாமல் போனது. சினிமா, பொழுது போக்கு பார்பனிய ஜாதி பாகுபாடு இவற்றுக்குள் சிக்கி தமிழர்கள் சிதைந்து சின்னபின்னமாயினர்.

தங்களது வரலாற்றை அறியாத ஒரு சமூகம் அழிந்து போகும் என்பதற்கு தமிழ் இனமே சிறந்த உதாரணம். உலகில் உள்ள அனைத்து போராட்டங்களும் வெற்றி பெற தமிழர்களின் போராட்டங்கள் மட்டும் ஏன் தோல்வியை சந்தித்தன.

இதற்க்கு நமது ஒற்றுமையின்மை, போலி தேசியம், தேசபக்தி, ஜாதி பாகுபாடு, மதவாதம் இவைகளை காரணமாக சொல்லலாம். ஈழத்தமிழர்கள்  சிங்கள பயங்கரவாதிகளுக்கு எதிராக 35 ஆண்டுகள் போராடி  ஒரு நாட்டை கட்டி அமைத்து வரலாற்றில் வீரர்களாக தங்களை பதித்து கொண்டார்கள்.

சிறிய இனமாக இலங்கை தீவில் வசித்தாலும் வரலாறு எங்கிலும் போற்றப்படும் வீரர்களாக முத்திரை பதித்தனர். நாமோ அந்த போராட்டத்திற்கு உயிர் கொடுக்காமல் அதை ஒழிக்க பாடுபட்ட ஹிந்தி அரசுக்கும், மலையாளிகளுக்கும் துணை நின்று கோழைகள் ஆகிப்போனோம்.

இதற்க்கு நாம் சொன்ன காரணம் பிராமணியம் நமக்கு படித்து கொடுத்த போலி தேசபக்தி. இன்றும் கூடன் குளம் அணு மின் நிலையம், பாலாறு, காவேரியாறு, முல்லை பெரியாறு, தமிழக மீனவர்கள் படுகொலை  இவை அனைத்தும் ஏதோ ஆப்பிரிக்கா கண்டத்தில் நடப்பது போல் நாம் மவுனம் காட்கிறோம்.

இப்படி பட்ட ஒரு இழிநிலை அடைந்த ஒரு இனத்திற்காக அதில் எஞ்சி இருக்கும் மானம் உள்ள தமிழர்கள் தங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தங்களை மாய்த்து கொள்கின்றனர்.  இதன் மூலமாவது  பாழாய்ப்போன தமிழ் இனம் உணர்வு கொள்ளும், விழிப்படையும் என்று அவர்கள் நம்பினால் அதுதான் இல்லை. எருமை மாட்டில் பேய்ந்த மழை போல் இருக்கிறார்கள் தமிழர்கள். மானம், வீரம் உள்ள தமிழா! இந்த கோழைகளுக்காக உன் உயிரை மாயத்துக்கொள்ளதே.

வீரத்துடன் போராடு! உன் உயிரை வீணே போக்கிக் கொள்ளாதே! உன்னை போன்ற வீரர்களுக்காக விரைவில் படையணி உருவாகும் அதுவரை காத்திரு! அதில் உன்னை இணைத்து கொள்!. உலக மாவிரர்கள் வழியில், போராளிகள் வழியில் மக்களுக்காக மக்களின் எதிரிகளோடு, விரோதிகளோடு போரிட்டு வீர மரணம் தழுவு. தீக்குளிப்பது, உண்ணாவிரதம் இருப்பது இது உன் போராட்டத்திற்கு எந்த பயனையும் கொடுக்காது. ரௌத்திரம் பழகு! தமிழா ரௌத்திரம் பழகு! எதிரிக்கு புரியும் மொழியில் பேசு அப்போதுதான் உன்போராட்டத்திற்கு வெற்றி கிடைக்கும்.


நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.

7 comments:

Anonymous said...

தன்மானத்தையும், வீரத்தையும் இழந்த ஒரு இனத்திற்காக மீண்டும் ஒரு உண்மை தமிழன் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்து விட்டான். நல்லா புத்தியில சுத்தியலால அடிச்சி சொன்னீங்கள் இபோவாவது உரைகிறதா பார்போம். மாலதி.

Anonymous said...

சரியான, முறையான வார்த்தெடுப்பால் மட்டுமே பார்பனீயம் ஆகிப்போன இந்தி, இந்திய வெறியை வீழ்த்த முடியும். எல்லா மக்களும் இன்புற்றிருக்க வேண்டும். எல்லா மக்களும் அவர்தம் உரிமை பெறவேண்டும். மக்களை கசக்கி,அடித்து, நொறுக்கி, குத்தடி, கிழித்து,எரித்து எல்லா கொடுமைகளையும் தாங்கிக்கொண்டு நீ இந்தியனாகத்தான் இருக்கவேண்டும் என்றால்..., அது என்ன மாதிரியான வழிமுறை என்று தெரியவில்லையே.

மனித குளம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அது நிம்மதியாக மனித சமூகம் அனுமதிக்கும் எல்லா உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும்.

அப்படி முடியாத பட்சத்தில் அவர்களை அவர்களின் விருப்பத்துக்கேற்ப உரிமை விடுதலே அவர்களை அடக்கி ஆளும் நாட்டுக்கு நலம் பயக்கும். இல்லை எனில் யுகம் யுகமாய் தொடரும் யுத்தம்.

THAMEEM

வலையுகம் said...

//கேரள அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு அவர் தீக்குளித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.//

படிக்கவே ரொம்ப அசிங்கமாக நல்லா வாய்க்கு வந்தபடி திட்டனும் போல இருக்கு பொதுஇடம் என்பதால் அடக்கிக் கொள்கிறேன்

தற்கொலை செய்து கொள்ளும் இந்த மோசமான பழக்கத்தை எங்கு கற்றுக் கொண்டார்கள் வீணர்கள்

போரில் மகன் மண்டுபோன செய்தி கேட்ட தாய் அம்பு (தைத்தது) குத்துப்பட்டது நேஞ்சிலா முதுகிலா என்று வினவி முதுகில் குத்துப்பட்டு இறந்தான் என்பதை அறிந்து அழமறுத்த புறநானுற்று வீரத்தாயின் வழிவந்தவன இவன்?.

அசிங்கம், அவமானம்

போராடி சாவது தான் பெருமை

A.R.ராஜகோபாலன் said...

அருமையான நடையில்
அக்னி போல் வார்த்தைகள்
திராவகம் போல
நம் இனத்தை அழித்ததை சொல்லியது

இன்னும் என்னவெல்லாம் படவேண்டுமோ????????

புனிதப்போராளி said...

ஏ௧ இறைவன் நல்லருள் புரியட்டும் ...........தமிழர்கள் தற்கொலை செய்து கொள்ளும் இந்த மோசமான பழக்கத்தை எங்கு கற்றுக் கொண்டார்கள் ....அசிங்கம், அவமானம் போராடி சாவது தான் பெருமை எம் தமிழ் மக்கள் உணருங்கள் [தமிழா உன் மரணம் உன் குடும்பத்தை சிதைத்து விடும் முதலில் உனது குடும்பத்தை வளப்படுத்து பிறகு தமிழகத்தை வளப்படுத்து ] உன் இனத்திற்காக நீ உயிருடன் இருந்தால் நன்மையா நீ தற்கொலை செய்வது நன்மைபயக்குமா சிந்திக்க மாட்டீர்களா தற்கொலை செய்வது கோழைகளின் முடிவு ஏ௧ இறைவனை வணங்கும் மக்களாக மாறினால் மட்டும்தான் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருந்து மாறமுடியும் மாறுவீர்கள .........by ...புனிதப்போராளி

MaduraiGovindaraj said...

செய்திகள் அனைத்தும் மக்களுக்கே!
காப்பி செய்து பயன்படுத்தலாம்.
அனுமதி பெற தேவையில்லை.
அசிங்கம், அவமானம்

போராடி சாவது தான் பெருமை

தமிழ் மாறன் said...

தன்மானத்தையும், வீரத்தையும் இழந்த இனமாக இப்போது தமிழ் இனம் மாறிவிட்டது. எப்போது உணர்வு கொள்வார்களோ! இந்த கோழைகளுக்காக உயிரை விடதேவையில்லை. உயிரை விடவேண்டும் என்றால் அது பிரோஜனமான வழிகளில் போக வேண்டும் இப்படி இல்லை.