Dec 15, 2011

வெத்து வேட்டு விஜயகாந்து!

DEC 15, முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசின் தமிழக விரோத போக்கை கண்டித்து சினிமாவில் நடிப்பதுபோல் நிஜவாக்கையிலும் நல்ல நடிகராக படம் நடித்துள்ளார் விஜயகாந்த்.


விஜயகாந்த் கேள்வி 1: தமிழகத்தை சுற்றியுள்ள மாநிலங்கள் நமக்கு பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது.  

ஆந்திராவில் பாலாறு பிச்சினை, கர்நாடகாவில் காவிரி பிரச்சினை, கேரளா மூலம் முல்லை பெரியாறு பிரச்சினை உள்ளது. இவ்வாறு இருந்தால் தேசிய ஒருமைப்பாடு எவ்வாறு வரும் ?

பதில் :
ஐயா!  விஜயகாத் அவர்களே! இப்பொழுதுதான்  இந்தியாவில் தேசிய ஒருமைப்பாடு  என்பது இல்லை என்று தெரிந்ததாக்கும்.  விருதகிரி படத்தில் நீங்கள் ஸ்காட்லான்ட்  யார்ட் போலீஸ்கே பாடம் எடுத்து, பன்ச் டயலாக் பேசிய உங்களுக்கே இந்த நிலைமையா?

எத்தனை படத்தில் தேசபக்தி பேசி தீவிரவாதிகளை அடக்கி இந்தியாவை காப்பாற்றினீர்களே! பாவம் சார் நீங்கள்! எப்படி எல்லாம் வீர வசனம் பேசி தேசபக்தி, ஒருமைப்பாடு என்று கூக்குரல் இட்ட உங்களையே விரக்தி அடைய வைத்து விட்டார்களே. இப்பவாவது உங்கள் தேசபக்தி போதை  தெளிந்த தேசந்தோசம். உண்மையிலேயே தேசபக்தி போதை தெளிந்ததா அல்லது தமிழர்களின் வாக்குகளை பெற நாடகமா?

விஜயகாந்த் கேள்வி 2: மத்திய அரசு மக்களை ஏமாற்றுகிறதா?

பதில் : என்னையா
கேள்வி இது  சின்னபுள்ளதனமா இருக்கு.  வருடக்கணக்கில் தூங்கிகொண்டு இருந்தீங்களா? இவ்வளவு நாளா என்ன நடக்கிறது என்று தெரியாமல் புதுசா கேட்கிறீங்கள்.  

நல்லா இருக்கையா உங்கள் வேஷம். உங்கள் படத்தில் ரொம்பவும் புள்ளி விபரம் எல்லாம் சொல்லி மக்களை அசத்துவீன்களே! ஓ! அதுவெல்லாம் வெத்து  வேட்டுன்னு சொல்லுங்கள்!  

மத்திய அரசு மக்களை ஏமாற்றுகிறது என்பது பாமர மக்களுக்கும்
இப்பதான் உங்களுக்கு புரிந்ததாக்கும்... மக்கு மக்கு... உங்களையெல்லாம் கொண்டு போயி எதிர் கட்சி தலைவன் ஆக்கினாங்களே அந்த மக்களை சொல்லணும்.

விஜயகாந்த் 
கோரிக்கை 1: அணை பிரச்சினையில் தீர்வு காண நதிகளை இணைக்க வேண்டும். இதை மத்திய அரசே முன் வந்து செய்ய வேண்டும்.

பதில்: ஐயா! விஜயகாந்த் அவர்களே! நதிகளை இணைக்க முடியும் என்று நினைக்கும்
உங்களின் அறியாமையை என்னவென்று சொல்ல. தமிழன் இளிச்சவாயன்! அதனால் தமிழர்களிடம்தான் மத்திய அரசின் ஏமாற்று
வேலையெல்லாம் பலிக்கும்.  

இந்தியாவில் உள்ள நதிகளை தேசியமயமாக்கி அதில் காவிரியை இணக்கப் போறோம் என்று சொல்லுங்கள் அப்போ தெரியும் உங்களுக்கு கர்நாடகாகாரன் யார்? என்று. தமிழகம் என்கிற ஒரு மாநிலத்துக்கு தண்ணீர் கொடுக்கவே இத்தனை கலாட்டா செய்யும் இவர்கள் தேசிய நதி நீர் திட்டத்திற்கு ஒத்து கொள்வார்களா? இது உங்களுக்கும் தெரியும் இருந்தாலும் மேக்கப் இல்லாமல் நடிக்கிறீங்கள்.

விஜயகாந்த் கோரிக்கை 2: தமிழகத்தை சேர்ந்த 39 எம்.பி.க்களும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.

பதில்:  சும்மா அரசியல் காமடி பண்ணாதீங்கள் சார்! ஈழத்திலே ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்படும் பொழுது வேடிக்கை பார்த்து கொண்டு பதவி சுகம், ஆட்சி அதிகாரம்  என்று இருந்த அரசியல் பொறுக்கிகள் ஒரு தண்ணீர் பிரச்சனைக்கா
கவா பதவியை துறப்பார்கள்!  உங்கள் பேச்சு வேடிக்கையும், விநோதமுமா இருக்கு. சும்மா இந்த பிலீம் காட்ற வேலையெல்லாம் வேண்டாம்.

தேவையில்லாத கேள்விகளையும், கோரிக்கைகளையும் வைத்து தமிழர்களின்  உண்மையான எழுச்சியை திசை திருப்ப வேண்டாம்.  தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டு தமிழர்களிடம் ஏற்ப்பட்டுள்ள எழுச்சிக்கு வலு சேருங்கள். இதிலும் அரசியல் ஆதாயம் தேடாமல் உருப்படியாக ஏதாவது செய்யுங்கள். தமிழ் மக்கள் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தின் அவசியத்தை உணர ஆரம்பித்துள்ளார்கள். தமிழர் எழுச்சி ஓங்கட்டும்! தனி தமிழ் நாடு என்ற முழக்கம் ஒலிக்கட்டும்.

*மலர்விழி* 

11 comments:

தமிழ் மாறன் said...

ஐயா! விஜயகாத் அவர்களே! இப்பொழுதுதான் இந்தியாவில் தேசிய ஒருமைப்பாடு என்பது இல்லை என்று தெரிந்ததாக்கும். விருதகிரி படத்தில் நீங்கள் ஸ்காட்லான்ட் யார்ட் போலீஸ்கே பாடம் எடுத்து, பன்ச் டயலாக் பேசிய உங்களுக்கே இந்த நிலைமையா?

நல்லா உறைக்கிறமாதிரி சொல்லியிருகீன்கள் வாழ்த்துக்கள் மலர்விழி.

Anonymous said...

இந்த சினிமாகாரர்கள் எல்லாம் இப்படித்தான் தமிழா இவர்களை உதைத்து தள்ளு.... விழிப்புணர்வு கொள்.
by - ராஜா.

Nathimoolam said...

இவரு அடிக்கிற “தண்ணி பாட்டிலோட’ brand வே போத ஏறல்லன்னாத்தான் பார்ப்பாரு, இவருகிட்ட இதயெல்லாம் சொல்லுரீங்க...
இவரு மம்மிக்கு கிடைச்ச சரியான டம்மி பீசு...
சுத்த உதவாக்கரை...

Anonymous said...

விஜயகாந்த் படத்தில் அவர் தன்னை தமிழன் என்று சொல்லி கொண்டதைவிட இந்தியன் என்று சொல்லி கொண்டதுதான் அதிகம். இந்த போலி தேசபக்தி கயமைத்தனத்தை தமிழகத்தில் அதிகம் சொல்லி திரிந்தது விஜகாந்த் மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஊதுகுழல் நடிகர் அர்ஜூன் போன்றவர்களே. இவர்கள் இந்திய உளவு அமைப்பான ராவை சேர்ந்த கைகூலிகள். தமிழர்கள் இவர்களை புறம் தள்ள வேண்டும். தோழமையுடன் : செல்வா.

Anonymous said...

தமிழர் போராட்டங்களை உடைக்க தமிழர்கள் மத்தியில் பிளவை உண்டாக்க மத்திய அரசு திட்டமிட்டு வேலை செய்கிறது. கூடங்குளம் அணு மின் நிலைத்து போராட்டத்தை வலுவிழக்க செய்ய "ரா" உளவு அமைப்பை சேர்ந்தவர்கள் தமிழகம் எங்கும் கூடி கிடந்தது சதித்திட்டம் தீட்டுகிறார்கள். தமிழர்களே உஷார்!! உஷார்!! உஷார்!

\\\\\\\நன்நிலத்தான்.

Anonymous said...

மம்மிக்கு கிடைச்ச சரியான டம்மி பீசு... சுத்த உதவாக்கரை,, நதி moolam தலைவரே டி. ராஜேந்தர் மாதிரி அடித்து தூள் கிளப்பி விட்டீர்கள்.

by; MANITHAN

Anonymous said...

நதிகளை இணைக்கலாம்
நாடுகளைக்கூட இணைக்கலாம்
நாடகம் போடும் நடிகர்களை
நம்ப வேண்டாம்

தமிழ் கூறும் நல்லுலகும்
இஸ்லாத்தை ஏற்ற நன்மக்களும்
நல்ல தலைமை இல்லாமல்
தவிப்பது விஜயகாந்த் போன்ற
நடிகர்களுக்கு வாழ்வுதான்

அது சரி, எந்த நதியை
இங்கு வந்து இணைக்க?
ஜலசமாதி செய்யும்
பிரம்மாண்ட கூவமான
கண்காவையா ?

கடவுளே எங்கள காப்பாத்து!
அத நெனச்சாலே குடல் புரட்டி
நாவு வெளியே தொங்குது
அந்த சாக்கடைக்குச் சொந்தம்
சாதீய சாக்கடை உண்டாக்கிய
சனாதனங்கள்தான்

எங்களின் தானைத் தருதலைகள்
தவறிழைக்கத் தயங்கினாலே
பொர்க்காலம் நிரந்தரமாகும்.
ஏரிகளை தூர்வாரு, கேனிகளை
சீர்படுத்து, மழை நீரை முறையே
சேர்த்துவிடு. நல்ல திட்டம் மக்களுக்கு
மட்டுமென்றே திட்டமிடு.

உன் மக்களும். உன் தொண்டர்களும்தான்
உனக்கு மக்களாக தெரிந்தால், பொது
மக்கள் காரி உமிழ்வார்கள். வழக்கம்போல்
துடைத்துக்கொண்டு அடுத்த ஆண்டும்
வோட்டு பிச்சைக்கேட்டு வருவாய் என்று
தெரியும். பாவம் எம் தமிழ் மக்கள்.

THAMEEM

புனிதப்போராளி said...

விஜயகந்துன்னா சும்மாவா அவர்தான் இந்தியாக்குள்ள வரும் தீவிரவாதிகளை சுட்டுக்கொல்லக்௬டியவர் .....கள்ளம் கபடம் இல்லாத தமிழ்மக்களிடம் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று முஸ்லிம்கள் மட்டும்தான் இந்தவுலகில் தீவிரவாதம் புரிகின்றனர் RSS ,,.VHP ,, துர்க்காவாகினி,,பாசிச குழுக்கள் ,,இவர்கள் இந்தியாவில் பூ தூவிக்கொண்டு இருக்கிறார்கள் என்று மீடியாவை பயன்படுத்தி முஸ்லிம்களை இளிவுபடுத்தியதில் இந்த விஜய காந்தனுக்கு முழு பங்குண்டு இவன் இந்த நாட்டுக்கு அதிகமாக நல்லது பண்ணியது போலவும் முஸ்லிம்கள் இந்த நாட்டை அளிப்பது போலவும் படம் எடுத்து நாட்டுமக்களை முட்டாள்களாக்கி இவன் இன்று அரியனையில் இருக்கின்றான் இவனையும் கேப்டன் என்று சொல்லும் தமிழன் இருக்கும் வரை நாடு உருப்படாது ,,வந்தவன் போனவன் எல்லாம் தமிழகத்தை ஆழ இனியும் தமிழர்கள் நாம் அனுமதிப்போமையனால் தமிழகதிற்கு தண்ணீர் என்ன காற்று ௬ட கிடைக்காது...இறைவனின் அற்ப்புத படைப்புகளில் ஒன்றுதான் தண்ணீர் இதை அடைத்து வைத்துக்கொண்டு உனக்கில்லை எங்களுக்கு மட்டும்தான் என்று சொல்லும் போது இறைவனின் வார்த்தைகள் யாபகம் வருகின்றது [காலச்சக்கரத்தை நாம் சுழலவைத்துள்ளோம் இன்று உயர்வாக இருப்பது நாளை தாழ்ந்து விடும் இன்று தாழ்ந்து இருப்பது நாளை உயர்ந்து விடும்] இதை உணராமல் போலி தேசபக்தி பேசிக்கொண்டு கள்ளப்பயல்கள் தமிழகத்துக்கு தண்ணீர் தரமறுக்கிறார்கள் தமிழர்கள் நாம் புதிய திட்டங்களை தீட்டுவோம் அணைத்து தமிழர்களும் ஒற்றுமையாக தமிழகத்தை காப்போம் களமிறங்குங்கள் நமது தலைமுறையாவது தண்ணீர் பிச்சைகொடு என்று அண்டைமாநிலதவனிடம் கேட்காமல் இருக்கட்டும் அதற்க்கான திட்டங்கள் பல உள்ளன முக்கியமாக [இறைவனின் அருள் வாக்கு கடலைப்பற்றி சிந்திக்க மாட்டிர்களா] தமிழகத்தில் கடல் சார்ந்திருகின்றது கடலைப்பற்றி நாம் சிந்தித்து முயற்ச்சி பண்ணினால் எந்த ஒன்றையும் தமிழர்களால் உருவாக்க முடியும் அப்படிபட்ட திட்டங்களினால் தமிழகம் தன்னிறைவு அடையும் தமிழகத்தில் மின்பற்றாக்குறை இருக்காது அனைத்தும் மின் மயமாக்கப்படும் [அணுமின் நிலையம் அவசியம் இல்லை ] விலைவாசி குறையும் தமிழர்கள் நிம்மதியாய் வாழமுடியும் ....எதற்கு எடுத்தாலும் மத்தியஅரசு மண்ணாங்கட்டி அரசு என்று சொல்லாமல் தமிழக அரசு தமிழர்களின் நலன் நாடி நாமாக புதிய புதிய திட்டங்களினால் லஞ்சலாவண்யம் இல்லாமல் தமிழகத்தை முன்னிலைப்படுத்த முயற்ச்சி பண்ணலாம் பண்ணுவார்களா பொறுத்திருந்து பார்ப்போம் ...........புனிதப்போராளி

புனிதப்போராளி said...

இறைவனின் சாந்தியும் சமாதானமும் மதிப்பிற்குரிய ஆசிரியர் புதியதென்றல் உங்களின் மீதும் எங்களின் மீதும் உண்டாவட்டுமாக..... புனித போராளி அவர்களே! உங்கள் எழுத்துக்களையும், சிந்தனைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்களேன். நீங்கள் விரும்பினால் உங்கள் ஆக்கங்களை சிந்திக்கவும் இணையத்தில் எழுதலாம்.,,,, மிக்க நன்றி ஆசிரியர் அவர்களே ... இறைவன் நாடினால் ஒரு அற்ப்புதமான படைப்புகளுடன் சிறந்த திட்டத்துடன் எனது ஆக்கங்களை.. நீங்கள் காண்பீர்கள் .....BY ...புனிதப்போராளி

MaduraiGovindaraj said...

தொடர்ந்து படிக்கும் ஆவலை கூட்டுகிறது,வாழ்த்துக்கள்.
வைகோ அப்போலோவில் தீ குளித்த ஜெயப்ரகாஷ் சந்தித்தபின் பேட்டி (காணொளி) EXCLUSIVE

தமிழ் மாறன் said...

விஜயகாந்த் பாக்கிஸ்தானை வைத்து கதாநாயகனாகி தமிழகத்தின் எதிர்கட்சி தலைவராகவும் ஆகி விட்டார். இவரது கேப்டன் பாட்ச்சா எல்லாம் இல்லாத பாகிஸ்தான்காரனை பிடிப்பதில் மட்டும்தான் மற்றபடி இவரால் ஒன்றும் செய்ய முடியாது. வெத்து வேட்டு விஜயகாந்த் என்கிற தலைப்பு பொருத்தம்தான். நன்றி.