Dec 11, 2011

இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 2).

* இது ஒரு அழகிய நிலா காலம்*

முத்துகுமார், தமிழ் செல்வன், அந்தோணி, இளங்கோ, ஆசாத், பசீர், மாலதி இவர்கள் பள்ளி படிப்பை முடித்து திருநெல்வேலியில் உள்ள ஜோன்ஸ் கல்லூரியில் தங்களது கல்லூரி வாழ்க்கையை துடங்கினர். கல்லூரியில் ஹொஸ்டலில் தங்கி படிப்பை தொடர்ந்து வந்தனர்.

அதுஒரு கோடைக்கால விடுமுறை, நண்பர்கள் சந்தோசமாக ஊருக்கு புறப்பட்டனர். திருநெல்வேலி இருந்து இராமநாதபுரம் போகும் பேருந்தில் பயணித்தனர். ஒருவருக்கொருவர் கல்லூரியில் நடந்த சில நிகழ்வுகளை பற்றி பேசி சந்தோசமாக சிரித்து மகிழ்ந்தனர்.

தமிழக வரலாற்றில் பெரும் மாறுதல்களை, உண்டாக்கப்போகும் நமது வரலாற்று நாயகர்களை பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.

1) முத்துக்குமாரின் தந்தை மாணிக்கம் பெரியபட்டினம் கடை வீதியில் பலசரக்கு கடை நடத்தி வந்தார். முத்துகுமாருக்கு ஒரு தங்கை உண்டு அவள் பெயர் செல்வி, அம்மா பெயர் தங்கம் இவர்கள் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்கள். முத்து குமாருக்கு ஒரு பத்திரிக்கையாளனாக வரவேண்டும் என்பதே இலட்சியம்.

2) முருகனின் தந்தை இரத்தின பாண்டி இவர் அந்த ஊரில் பரம்பரை பணக்காரர். நிறைய சொத்துக்கள், பண்ணை வீடு, கார்வசதி என்று வளமாக இருப்பவர். முருகனின் தம்பி ராஜா, தங்கை தமிழரசி அவனின் அம்மா செர்ணம்.  முருகன் வீட்டின் தலைதனையன் அவனது அப்பாவுக்கு அவனை டாக்டர் ஆக்கவேண்டும் என்று ஆசை ஆனால் முருகனுக்கோ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படிக்க  ஆசை.

3) இளங்கோவன் தந்தை கிறிஸ்டோபர் மீனவர் சமூகத்தை சேர்ந்தவர். தின கூலிக்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்பவர். இவரது மனைவி ரோஸ் மேரி, இவருக்கு யாழினி, மலர்விழி என்று இரண்டும் பெண்பிள்ளைகளும் உண்டு. இளங்கோவன்தான் வீட்டின் மூத்த பையன். இவனது தந்தையார் சிறந்த தமிழ் ஆர்வலர் அதனாலேயே பிள்ளைகளின் பெயர்களை செந்தமிழில் வைத்திருந்தார்.

4) அந்தோணியின் தந்தை தாசப்பன், இவருக்கு சொந்தமாக பல மீன்பிடி படகுகள் இருந்தன. ஊரிலே பெரும் புள்ளி. இவருக்கு மீன் வியாபாரம் முக்கிய தொழில். சொந்தமாக மூன்று பெரிய லாரியும், இரண்டு சிறிய வேன்களும் உண்டு. இவனது அம்மா ஸ்டெல்லா, அண்ணன் மரியதாஸ் தங்கை பிருந்தா. அந்தோணியின் ஆசை IPS  ஆகவேண்டும் என்பது. 

5) பசீர் உடைய வாப்பா முஸ்தபா தமிழ் ஆசிரியர், உம்மா நூர்ஜகான் கணித ஆசிரியை இவர்கள் இருவரும் பெரியபட்டினம் அரசு மேல்நிலை பள்ளியில் பணியாற்றி வந்தார்கள். பஷீரின் தங்கை  சபினா, தம்பி கலீல், இவனை ஆசிரியர் ஆக்கவேண்டும் என்பது பெற்றோர்களின் விருப்பம். ஆனால் பஷீருக்கோ ஜெனடிக் இஞ்சினியரிங் படிக்க ஆசை.

6) ஆசாத் உடையாவாப்பா அரசியல்வாதி, பெரியபட்டினம் பஞ்சாயத்து தலைவர், கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர், காந்தியவாதி. ஆசாத் வீட்டிற்கு ஒரு மகன், இவனது அம்மா பாத்திமா இவனுக்கு கம்ப்யூட்டர் இஞ்சினியர் ஆகவேண்டும் என்பது ஆசை. 

7) மாலதி வசதியான குடும்பத்தை சேர்ந்தவள், தந்தை செல்வம் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர். மாலதியின் அம்மா முத்து குமாரி அண்ணன் புகழ் என்கிற புகழேந்தி MA வரலாறு படித்து விட்டு தந்தைக்கு தொழில் உதவியாக இருக்கிறான். மாலதிக்கு டாக்டர் ஆகவேண்டும் என்பது கனவு.

நண்பர்கள் ஏழுபேரின் வாழ்க்கையை காலம் எப்படி மாற்றி போடப்போகிறது என்று பார்ப்போம்.  தொடரும்..........
 நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.
 

7 comments:

Anonymous said...

நல்ல விறு விருப்பை நிறைத்து, மறைத்து நிற்கும்போல் தெரிகிறதே?!

VANJOOR said...

அப்பாடா !

இரண்டு வாரம் காத்திருந்தோம் .

தொய்வில்லாமல் தொடருங்கள்.

--------------

click the link and read.

**** தினமணிதான் இந்துமுன்னணி! – வைத்தி மாமாவின் ஒப்புதல் வாக்குமூலம்!! தினமலர் மக்கள் விரோத பார்ப்பனியப் பத்திரிகை, தினமும் மலத்தை தள்ளுகிற பத்திரிகை என்பது ஊரறிந்த ஒன்று. ஆனால் தினமணி என்றால் நடுநிலைமையான பத்திரிகை என்று பல மிடில் கிளாஸ் மாதவன்கள் கருதுகிறார்கள். அது உண்மையல்ல என்பதற்கு சமீபத்திய சான்று.

.

RMY பாட்சா said...

எதிர்பார்த்துகொண்டு இருப்பதுதே,
ஒருஇனிமைதான்.
தொடரவாழ்த்துக்கள்.

தமிழ் மாறன் said...

வணக்கம் தென்றல் கதை மூலம் தமிழ் மக்களுக்கு நல்ல செய்தி சொல்லலாம் என்று நினைகிறீங்கள் வாழ்த்துக்கள்.

PUTHIYATHENRAL said...

நன்றி வாஞ்சூர் அண்ணன்! நலமா இருக்கீங்களா..... தொடர்ந்து வருகை தருவதற்கும் கருத்து சொல்வதற்கும் நன்றி!

PUTHIYATHENRAL said...

நன்றி ஆர். எம். ஒய். பாட்சா அவர்களே! உங்கள் கருத்துக்கள் உற்ச்சாகம் அளிக்கின்றன. நன்றி.

PUTHIYATHENRAL said...

வணக்கம் தமிழ் மாறன் நலமா இருக்கீங்களா ரொம்ப நாள் ஆட்சே உங்கள் கருத்துக்களை பார்த்து. நன்றி.