Dec 7, 2012

மதங்களை கடந்து ஒற்றுமையான குரல்!

Dec 07: பாபர் மசூதியை அதே இடத்தில் கட்ட வேண்டும் என்று சொல்லி ஹிந்து, முஸ்லிம், சீக்கிய தலைவர்கள் டெல்லியில் குரல் எழுப்பி உள்ளனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் டிசம்பர் 6 தர்ணா போராட்டம் நடைபெற்றது. அதில் பேசிய தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் “பாபரி மஸ்ஜித் இடிப்பை மறக்கவேண்டும் என்று யார் முயற்சித்தாலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அதற்கு ஒருபோதும் அனுமதிக்காது. பாபரி மஸ்ஜித் மீண்டும் கட்டப்படும் வரை வரும் தலைமுறையினருக்கு பாபரியின் நினைவையும், எதிர்ப்புணர்வையும் பகிர்ந்து அளித்துக்கொண்டே இருப்போம் என்றார்.

பாபரி மஸ்ஜித் முஸ்லிம்களுக்கும் மட்டுமான பிரச்சனை அல்ல. இது ஒரு தேசிய பிரச்சனை. பாபரி மஸ்ஜித் இடிப்பை மறக்கவேண்டும் என்று மதசார்பற்ற கட்சிகள் என்று கூறுவோர் மனதால் விரும்புகின்ற சூழல் கீழ் தரமானது என்றார். மஸ்ஜிதை இடிக்க சதித்திட்டம் தீட்டியவர்கள் என்று லிபர்ஹான் கமிஷன் சுட்டிக்காட்டிய எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோரெல்லம் இப்போழுது சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் திராணி மன்மோகன் சிங் அரசுக்கு இல்லை.மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்டும் வரை இதற்காக போராடிக் கொண்டே இருப்போம்.
 
பாபரி மஸ்ஜித் மீண்டும் கட்டவேண்டும் என்றும், நிரபராதிகளான முஸ்லிம்களை விடுதலைச் செய்யவேண்டும் என்றும் கூறுவது தீவிரவாதம் என்றால், நாங்கள் தீவிரவாதிகள் தாம் என்று டெல்லி சட்டப்பேரவை உறுப்பினரான முஹம்மது ஆசிஃப்கான் கூறினார். சிறுபான்மை தீவிரவாதம் என்று அரசும், ஊடகங்களும் பரப்புரைச்செய்வது அவதூறாகும். தீவிரவாதங்கள் அனைத்தும் அரசு ஆரம்பம் செய்வதாகும் என்று சீக்கிய பேரவை தலைவர் ஹர்மீந்தர் சிங் கூறினார். முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் நாட்டிற்கு எதிரான தாக்குதல் என்று லோக் ராஜ் சங்கத் தலைவர் பிரவீண் தனது உரையில் கூறினார்.

1 comment:

Easy (EZ) Editorial Calendar said...

இப்பவாது ஒற்றுமையா இருக்காங்களே....அதுவே மிக பெரிய விஷயம்.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)