கடவுள் படைத்ததை மனிதன் அழித்தா ன்
மனித மமதைஅழிக்க கடவுள் மனத்தைப் படைத்தான் ..!!
உள்ளிருந்துகொல்லும் ஒட்டுண்ணியாய் மனசு..
உடலெனும் மரத்தில் முளைத்த நாள்முதலாய் முரண்டு..
தீனியிட்டே தீர்ந்துபோகிறேன்
தீயிலிடவும் துணிந்து போகிறேன்.
ஏ மனமே உன்னைக் கைக்கொள்ளத்துடிக்கிறேன்
கைமீறியே போகிறாய் செய்வதறியாது திகைக்கிறேன் .
உடலோடும்..உலகோடும் ஒட்டாத மனமே..
இனிப்பாய்ப் பேசினால் உடனே ஓடுகிறாய்..
பச்சை நாணலெல்லாம் கொழுக்கொம்பென்றே எண்ணிப் படர்ந்திட நினைக்கிறாய் .
எச்சரிக்கும் உள்ளுணர்வில் ஏதோ....
சொன்னாலும் உடனே பகைக்கிறாய்.
நல்லதைக்கொள்ளெனிற் எனைக்கொல் லும் மனமே
உனைக்கொன்றிட நினைக்கிறேன்..
உன்னுள்ளிருக்கும்உதறியெழ
உடைந்து மடிகிறேன்.
படைத்தவன் கணக்கு பாங்காய் நிறைவேற
பாவியேன் என்னசெய்ய ...?
ரௌத்திரம் பழகு
...யாழினி...
7 comments:
//உடலோடும்..உலகோடும் ஒட்டாத மனமே..
இனிப்பாய்ப் பேசினால் உடனே ஓடுகிறாய்..//
ஓடாதே
ரௌத்திரம் பழகு
//பச்சை நாணலெல்லாம் கொழுக்கொம்பென்றே எண்ணிப் படர்ந்திட நினைக்கிறாய்.//
அடங்காக் குதிரை அது!
அடக்குவதில் வெற்றி நமது!
மடக்கக் கருதும் பிறமனங்கள்
மறுப்பில் விளையும் வேறுமணங்கள்
முடங்கச் செய்யும் பேராசை
முயற்சி தொடர்ந்தால் இலக்குறுதிகடப்போம் தடைகள் உறுதியென
காலம் உண்டு வெல்வதற்கு!
அடங்காக் குதிரை அகமென்பார் ஊரில்
புதிய தென்றலின் மனம் பற்றிய கவிதை நன்று! இன்னும் மெருகேற்றினால் மேலும் சிறக்கும்.
ஹைதர் அலி பாய்,
உங்கள் கமெண்ட்டை வைத்து ஒரு வெண்பா முயன்றேன்.
அடங்காக் குதிரை அகமென்பார் யாரும் கடகட தாவிடக் கண்டு குரங்கென்பார்
உள்ளத்தை ஆளும் வரமது பெற்றவர்க்காம்
எல்லா நலமும் அறி!
மனம் ஒரு குரங்கு என்பதை அழகா சொல்லி இருக்கீங்கள். இலட்சியம் இல்லாத மனிதனின் மனம் குரங்கு போல்தான். இலட்சியமும், பிரச்சனைகளும் இல்லாத மனிதன் சுகபோக வாழ்விலே மூழ்கி விடுகிறான் அப்போது அவனது மனதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அவன் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலை வரும் போது, மனம் முழுவதும் வெறுமனே கிடக்கிறது . அந்த வெறுமனே இருக்கும் மனதுக்கு தீனியாக அது பார்பதையும் கேட்பதையும் பற்றி சிந்திக்கிறது.
மனிதன் ஒரு இலட்சியத்தை தாங்கி நின்றால் மனம் அதை பற்றி நினைக்கும். அதைப்பற்றி யோசிக்கும். இடையிடையே சக மனிதர்களால் வரும் சிறு சஞ்சலங்களும் ஒரே சிந்தனை படைத்தவர்களை மீண்டும் சந்திக்கும் போது, பேசும் போது மாறிவிடுகிறது. மீண்டும் தாம் கொண்ட இலட்சியத்தை நோக்கி விரைவாக பயணப்பட உதவுகிறது. இலட்சியம் எனும் தீ வளர்க்கும் போது அதில் மனம் கரைந்து போகும் தோழி.
ரௌத்திரம் பழகுவோம்!! ஒவ்வொருவரும் ரௌத்திரம் பழகுவோம்! இலட்சிய தீ வளர்த்து அதில் யாகம் செய்வோம்! நம் முன் நிற்கும் பிரச்சனைகள் ஆயிரம்! ஆயரம்! ரௌத்திரம் பழகுவோம்! அநீதிகளை அழிக்க, தீமைகளை ஒழிக்க ரௌத்திரம் பழகுவோம்!
Say tru every one wanna think about that.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது மனிதன் தனது வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்தால் மனம் அவன் வசப்படும்.
It's nice article thank u.
Post a Comment