Jul 26, 2011

ஆபாசம், வன்முறை, உள்ள சினிமாகளுக்கு வரிவிலக்கு இல்லை!

July 27,சென்னை : ‘தமிழில் சினிமா படப்பெயர் இருந்தாலும், வன்முறை, ஆபாசங்கள் இருந்தால் வரிவிலக்கு கிடையாது’ என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கேளிக்கை வரிச்சலுகை பெற, திரையிடப்படும் பழைய மற்றும் புதிய திரைப்படங்களின் தமிழ் பெயர், தமிழ் பண்பாட்டிற்கு உகந்ததாகவும், கண்ணியமானதாகவும் உள்ளதா என ஆய்வு செய்து பரிந்துரை செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது.

கேளிக்கை வரிச்சலுகை பெற திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன், கூடுதல் தகுதி வரையறைகளை நிர்ணயம் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, கேளிக்கை வரிச்சலுகை பெற விரும்பும் திரைப்படம், திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து ‘யு‘ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

திரைப்படத்தின் கதையின் கருவானது தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருத்தல் வேண்டும். திரைப்படத்தின் தேவையை கருதி பிறமொழிகளை பயன்படுத்தவும், காட்சிகளை தவிர பெருமளவில் வசனங்கள் தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும். வன்முறை மற்றும் ஆபாசங்கள் அதிக அளவில் இடம் பெறுமேயானால் அத்திரைப்படம் வரிவிலக்கு பெறப்படுவதற்கான தகுதியை இழக்கும்.

1 comment:

Anonymous said...

ஆபாச சினிமாவுக்கு நீ வரி போட்ட என்ன போடாட்டி என்ன இதனால் மக்களுக்கு என்ன இலாபம் கிடைக்கபோவுது. விதிக்கிற வரியை முழுசாக விழுங்குவதற்கு அரசியல் வாதிகள் காத்திக்கிட்டு இருக்கும்போது மக்களுக்கு என்ன இலாபம் இதெல்லாம் மக்களை ஏமாற்றி மக்களுடைய கலாச்சாரத்தை மாற்றி மக்களை பாதாளத்தில் தள்ளும் செயலேதனே ஆபாச சினிமா எடுப்பவனையும் வன்முறையை தூண்டும்விதமாக சினிமா எடுப்பவனையும் சுட்டுத்தள்ளவேண்டும். அப்படி சட்டம் இயற்றிப்பார். எல்லாம் சரியாகிவிடும். கையாலகாத இப்படிப்பட்ட சினிமாக்களை அனுமதிக்கும் தணிக்கைத்துறை.மூடிவிட்டு பார்பர்ஷாப் திறக்கலாம். அல்லது இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்து அப்புறம் பாரு எல்லாம் எப்படி செயல்படுதுன்னு.