Jul 23, 2011

பாரதிய ஜனதா முதல்வர் எடியூரப்பா ரூ.1 லட்சம் கோடி ஊழல்!

பெங்களூர், ஜூலை 24: சட்ட விரோத சுரங்கத் தொழில் ஊழல் விவகாரம் தொடர்பான லோக் ஆயுக்த அறிக்கையில் எடியூரப்பா பெயர் இடம் பெற்றுள்ளதால், முதல்வர் பதவியை அவர் ராஜிநாமா செய்யக் வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் சார்பில் பெங்களூரில் சனிக்கிழமை தர்னா நடைபெற்றது.

சுதந்திரப் பூங்காவில் நடைபெற்ற இப் போராட்டத்தை மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. பரமேஸ்வர் தொடக்கி வைத்தார். எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது சித்தராமையா பேசியது: கடந்த 3 ஆண்டு கால பாஜக ஆட்சியில் சட்டவிரோத சுரங்கத் தொழிலின் மூலம் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்றார்.

மேலும் பாரதிய ஜனதா ஆட்சியில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்படுவதாகவும், எல்லா துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதாகவும் குறிப்பிட்டார். கர்நாடகாவை ஆளும் பா.ஜ.க தலைமையிலான அரசு பசுவதை தடைச்சட்டம், பள்ளிக்கூடங்களில் பகவத் கீதையை படிப்பதை கட்டாயமாக்குதல் போன்ற ஹிந்துத்துவ பயங்கரவாத அஜண்டாக்களை அமுல்படுத்தி வருகிறது.

பாரதிய ஜனதா கல்வி அமைச்சர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி, பள்ளிகளில் பகவத் கீதையைப் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வந்தார். இதற்கு பல தரப்பிலும் கடும் கண்டனம் எழுந்து வந்தது. இதற்க்கு பதில் அளித்த அவர் பள்ளிகளில் பகவத் கீதையைப் படிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதை சிலர் எதிர்க்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் பேசாமல் நாட்டை விட்டு வெளியேறி விடலாம்’ என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

Anonymous said...

எடியூரப்பா எவ்வளவு இந்திய ரூபாயை தின்றாலும் தப்பில்லை ஏனெனில் அவர் ஒரு RSS அனுதாபி ஒரு பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவர். அவரிடம் குற்றம் கண்டுபிடிக்க நீ யாரய்யா? ராஜா தப்பு செய்தால்தான் தப்பு. ஏனெனில் அவன் ஒரு தலித். - கிட்டப்பா