Jun 22, 2011

தமிழீழ போராட்டமும் இலங்கை முஸ்லிம்களும் ஒரு பார்வை!

JUNE 23, கொழும்பின் தென்புற நகரான தெஹிவளை, முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஒரு பகுதி. கல்கிஸை தெஹிவளை மாநகர சபையில் முஸ்லிம் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படும் அளவிற்கு அதிக முஸ்லிம்கள் வாழும் ஒரு பகுதி.

தெஹிவளை 5 ஜீம்மா பள்ளிவாசல்கள் 8 சாதாரண பள்ளிவாசல்களை கொண்டது. அந்த அளவுக்கு அங்கு முஸ்லிம்கள் பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள்.

இலங்கை அரசியல் பொளத்த மயமாக்கப்பட்டு வருகிறது. பொளத்த மதம் அமைதியை விட்டு ஆயுதமயப்படுத்தப்பட்டு வருகிறது,

புத்தர் உயிர் வதை கூடாது என்று அகிம்சை போதித்தவர், அவர் பெயரை சொல்லி மனித வேட்டை ஆடப்படும் பூமியாக இலங்கை மாற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தெஹிவலை பாத்தியா மாவத்தை மஸ்ஜிதை பொளத்த துறவிகள் முற்றுகையிட்டு, தடைசெய்ய முற்பட்டுள்ளனர்.  இவர்களுக்கு பயந்து முஸ்லிம்களும் அந்த பள்ளிவாசலை மூடிவிட்டார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் ஒன்றை நம் கவனிக்க வேண்டியது உள்ளது அது " ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்" என்பதே. ஆரம்பம் முதல் தமிழ் மக்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமையின்மை இப்பொது சிங்கள காடையர்களுக்கு ஒரு ஆயுதமாக மாறிவிட்டது.

தெஹிவளை விவகாரம் வெறுமனே அப்பகுதி முஸ்லிம்களின் பிரச்சனையல்ல. இலங்கை வாழ் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் உரிமை தொடர்பான பிரச்சனை.

தமிழீழ விடுதலைபுலிகள் அமைப்பு இந்த போராட்டத்தை ஆரம்பிக்கும் போது அதில் முஸ்லிம்களையும் இணைத்து கொள்ளாதது ஒரு பெரும் தவறான விடயமே. இதனாலேயே தமிழீழ போராட்டம் தோல்வியை நோக்கி நகர்ந்தது.

புலிகள் ஆரம்பத்தில் பயிற்சிகள் கற்று கொண்டது பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடமே! இப்படி யாசர் அரபாதிடம் கொரில்லா பயிற்சி உக்திகளை கற்றவர்கள், ஏனோ இந்த போராட்டத்தில் முஸ்லிம் சமூகத்தை ஒருங்கிணைக்கும் வித்தையை மறந்தார்கள்.

முஸ்லிம்களை வெறும் நிதி வசூல் செய்யும் ஒரு இயந்திரமாகவே பயன்படுத்தினார்களே அல்லாமல் 'அவர்களை அந்த போராட்டத்தில் இணைத்து கொண்டு முன்னேறும்' ஒரு வழியை புலிகள் தவறவிட்டார்கள்.

அதுமட்டுமல்லாது பிற்காலத்தில் பள்ளியில் தொழுகை நடத்தி கொண்டிருந்த நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம்களை கொன்று குவித்தது, மூதூர் வெளியேற்றம் இப்படி புலிகள் முஸ்லிம்களின் வெறுப்பை பரிபூரணமாக சம்பாதித்து ஈழத்தமிழர் போராட்டம் என்பது முஸ்லிம் சமூகம் இல்லாத ஒரு போராட்டமாக வடிவமைக்கப்பட்டது.

இதன்காரணமாக இவர்கள் போராட்டம் ஒரு வீரியம் பெற்றிருக்கவில்லை என்பதோடு, உலகின் ஒரு பெரும் சமூகத்தின் ஆதரவை, இலங்கையின் மூன்றாவது பெரும் மக்கள் சக்தியாக திகழும் முஸ்லிம் சமூகத்தின் ஆதரவை பெற தவறியது அவர்களின் பேராட்டத்தை தோல்வியை நோக்கி தள்ளியது.

இது விசயத்தில் முஸ்லிம்களையும் நம்மால் குறை சொல்ல முடியும். அவர்களும் ஈழத்தமிழர் போராட்டத்தில் தங்களை தாமாகவே   இணைத்து கொண்டிருக்க வேண்டும். அவர்கள் அது விசயத்தில் ஏற்படுத்திய வெற்றிடம் 'இப்போது ஈழத்தமிழர் போராட்டம் ஒடுக்கப்பட்டு விட்ட கையோடு' சிங்கள இனவாத காலிகளின் கவனம் முஸ்லிம்கள் பக்கம் திரும்பி விட்டது.

ஈழத்து  போராட்டத்தில் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராடி இருந்தால் இப்போது தனி தமிழீழம் அமைந்திருக்கும். உலக அளவில் அதற்க்கு ஆதரவும் இருந்திருக்கும். இப்போது சிங்களவர்களின் கண்கள் முஸ்லிம்கள் தொழில் வளங்களை கண்டு பொறாமை கொண்டுள்ளது. முஸ்லிம்களின் பொருளாதாரத்தை கைப்பற்றுவது அவர்களை இரண்டாம் தர சமூகமாக மாற்றுவது இதுவே அவர்கள் திட்டம்.

இனி பழையதை பேசி காரியம் இல்லை! இப்போதாவது இவர்கள் இணைந்து செயல்படுவார்களா? அப்படி செயல்படுவார்கள் என்றால் வெற்றி நிச்சயம். இலங்கை மற்றும் இந்திய முஸ்லிம்கள் இன்னும் பள்ளிவாசலில் புலிகள் நடத்திய தாக்குதலையும், மூதூர் வெளியேற்றத்தையும், சில லங்கா ஸ்ரீ இணையதளங்கள் முஸ்லிம்களை, அவர்களின் போராட்டங்களையும் தீவிரவாதம் என்று எழுதி வருவதையும் பற்றி பேசி வேறுபட்டு நிற்க வேண்டாம்.

மறப்போம் மண்ணிப்போம் என்று எண்ணி தமிழீழ போராட்டம் என்பது மதங்களை கடந்து தமிழர் என்ற ஒற்றுமை உணர்வோடு ஒரே தளத்தில் இருந்து செயல்பட்டாலே வெற்றி பெற முடியும் என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.

அன்புடன் ஆசிரியர்: புதியதென்றல்.

4 comments:

Anonymous said...

முற்றும் முழுதுமான தவறான கருத்துக்களை வைத்து புனையப்பட்ட பதிவு இது. ஈழ போராட்டத்தில் முஸ்லிம் மக்களின் பங்களிப்பும் கணிசமாக இருந்தது. தெற்கிலுள்ள முஸ்லிம அரசியல் வியாபாரிகள் தமது சொந்த நலனுக்காக சிங்கள அரசின் கைக்கூலிகளாக மாறி தாம் தனிஇனம் என்று மதத்தை இனமாக்கி கூவிக் கொண்டு முஸ்லிம்களையும் தமிழர்களையும் பிரிக்கும் சிங்கள கொலைவெறியரின் முயற்சிக்கு ஆதரவு நல்கினர். இதனால் இரு இனங்களுக்கிடையில் முரண்பாடு தோன்றியது. அத்துடன் தெற்கில் நல்ல பதவிகளில் இருந்த தமிழ் இளைஞர்களை வேட்டையாடப்பட்டு அவர்களின் இடங்களுக்கு முஸ்லிம் இளைஞர்களை பணியமர்த்தியது சிங்களம். வடக்கின் பாதைகளில் சிங்கள பாசரைகளில் முஸ்லிம் இளைஞர்களை புலனாய்வுப் பிரிவில் அமர்த்தி தமக்கு கீழ்படியாத இளைஞர்களை சிங்களத்திற்கு காட்டிக் கொடுத்தது. கிழக்கில் சிங்கள கொலைவெறியருடன் சேர்ந்து ஊர்காவல்படை என்னும் பெயரில் பணியமர்த்தபட்ட முஸ்லிம்கள் தமிழரின் வாழ்விடங்களை அபகரித்து 2000க்கும் அதிகமான அப்பாவி தமிழரை கொன்று குவிக்க உதவியது. இதன் பின்னே கருணா என்ற துரோகியின் தலைமையில் கிழக்கில் முஸ்லிம்கள் அழிக்கபட்டனர். அந்த கொலைவெறியன் இயக்கத்தை விட்டு தப்பி ஓட உதவியதும் ஒரு முஸ்லிம் அரசியல் வாதியே. கிழக்கில் நடந்த அசம்பாவிதங்கள் காட்டிக் கொடுப்புகள் வடக்கிலும் ஏற்படும் என்றதொரு நிலையிலேயே முஸ்லிம்கள் அங்கிருந்து அகற்றப்பட்டனர். உண்மையில் முஸ்லிம்கள் இயக்த்தினுள் இருந்திருப்பின் எப்போழுதோ இயக்கத்தின் செயல்பாடுகள் துரோகச் செயல்களினால் முடிவடைந்திருக்கும். உலகம் அன்றே ஈழப் போராளிகளை பயங்கரவாதிகளாக முத்திரை இட்டிருக்கும். இவைகளே உண்மை. ஊமைகளாய் தமிழர் இருப்பதனால் எதையும் பேசலாம் எழுதலாம் என்று ஆர்ப்பரிக்காதீர்கள். உண்மை ஒருநாள் வெளிவரும். அன்றும் சரி இன்றைய நிலையிலும் சரி சமாதான பேச்சுவார்த்தைகளை குழப்பியதற்கு மூலகாரணகர்த்தாக்கள் முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்றாம் தரப்பு முத்தரப்பு என்று குட்டையைக் குழப்பியடித்தார்கள். அன்றே தமிழினம் கூறியது, நாம் என்றாவது தோற்றால் அடுத்தது உங்களுக்கு அதேகதிதான் என்று. இன்று அந்த நிலை வந்துள்ளது. அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஏதோ பரிசுத்தமானவர்கள் தவறு செய்யாதவர்கள் என்று கூக்குரலிடாதீர்கள். காலம் பதில் சொல்லும்.

Anonymous said...

ஒற்றுமை குறித்து இருதரப்பும் இணைந்திருந்து செயல்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ஆசிரியர் எழுதி இருந்ததை தப்பு அருத்தம் கற்பிக்க வேண்டாம். முஸ்லிம்களை சேர்த்திருந்தால் உங்கள் போராட்டதிருக்கு தீவிரவாத முத்திரை குத்தி அழித்திருப்பார்கள் என்ற உங்கள் கருத்து உங்கள் அறிவீனத்தையே காட்டுகிறது. முஸ்லிம்கள் இல்லாத உங்கள் ஈழபோராட்டத்தை இப்போதும் உலகம் என்னவென்று சொல்கிறது இப்போதும் புலிகள் அமைப்பு உலக அளவில் தீவிரவாத இயக்கம்தான். நாங்கள் நினைக்கவில்லை அப்படி, உரிமைக்காக போராடும் எல்லாரும் மக்கள் போராளிகளே. உங்களை போல் நீங்கள் போராடினால் மக்கள் போராட்டம் அதே சமயம் பலஸ்தீனம், கொசவா, செசன்யா, இது வெல்லாம் மக்கள் போராட்டம் இல்லை. நீங்கள் இப்படி பேசியும், எழுதியும் வருவது போல் அல்ல முஸ்லிம்கள். முஸ்லிம்கள் உங்களையும் போராளிகள் என்று நினைத்துதான் உங்களுக்கு பாலஸ்தீன் இல் பயிற்ச்சிகள் கொடுத்தார்கள் மறந்து விடவேண்டாம். உலகில் போராலாளிகள் அமைப்பு தோல்விகண்டது இலங்கையில் மட்டும்தான். இதில் இருந்து உங்களது தவறான அணுகுமுறை ஒரு காரணம் என்தை புரிந்து கொள்ள முடிகிறது. அதை முதலில் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் தமிழ் பேசும் மக்களில் ஒரு பகுதியாக முஸ்லிம்களை காட்டாமல் அவர்களை ஏதோ அந்நிய இறக்குமதி போல் பிரித்து பேசும் மனோபவாத்தை விட்டொழியுங்கள். தமிழ் பேசும் மக்கள் என்ற ஒற்றைய பேனரில் வராமல் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்ச்சிகளும் தோல்விகளை நோக்கியே நகரும் என்பதை நினைவில் கொண்டால் சரி. இதற்குதான் மகஇக தோழர் மருதையன் இதை வர்க்க போராட்டமாக கொண்டுசென்றால்தவிர இதில் வெற்றி காண முடியாது என்று சொல்லியதை இங்கு நினைவு கூற வேண்டி உள்ளது.

Anonymous said...

நாம் என்றும் ஒரு போதும் முஸ்லிம் மக்களை அந்நியர்களாக பார்த்தது கிடையாது. அவர்கள் எம் தமிழ் சமூகத்தினர் தான் என்ற உணர்வுடனே பழகினோம். பழகி வருகிறோம். ஆனால் நீங்கள் அப்படியல்ல. உங்கள் மதத்தை முன்னிலைப்படுத்தி உங்கள் சுயநலன்களுக்காக பேரினவாத வெறியருடன் கூட்டுச் சேர்ந்து தனி்ச் சமூகம் என்றதோரு நிலைப்பாட்டை எடுத்துள்ளீர்கள். இப்போதும் நான் கூறுகிறேன். முஸ்லிம்கள் சேர்ந்திருந்தால் அன்றே அன்றே அதனை பயங்கரவாதமாக உலகு அறிவித்திருக்கும். பலஸ்தீனிய போரளிகள் மட்டுமல்ல லெபனான் போரட்டக் குழுக்கள் கூட இயக்கத்திற்கு பயிற்சிகள் அளித்தார்கள். அதன் பிரதிபலன் என்ன சிங்கள அரசு இஸ்ரேலுடன் சேர்ந்து எம் போராட்டங்களை கருவறுக்க முயலவில்லையா? ஒற்றுமையை இன்றும் எம் தமிழ் அரசியல்வாதிகள் வேண்டிக்கொண்டு தானிருக்கின்றார்கள். ஆனால் உங்கள் அரசியல் வாதிகள் என்ன செய்கின்றார்கள். உங்களிடம் வாக்கைப் பெற்றுவிட்டு உங்களை அழிக்க நிலைப்பவர்களையே தொழுது நிற்கின்றார்கள். இன்றைய நிலையிலும் உங்கள் அரசியல் வாதிகள் தமிழருக்கு உரிமை வழங்கப்ட்டு விட்டால் தாம் ஓரம் கட்டப்பட்டு விட்டுவிடுவார்கள் என்ற ரீதியிலே பயங்கரவாத அரசிற்கு ஆதரவளிக்கின்றார்கள். முஸ்லிம் நாடுகளின் ஆதரவினை இந்த பயங்கரவாத அரசு பெற உதவிக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு காலத்தில் நெல்சன் மண்டேலா யாசர் அரபாத் போன்ற போராளிகளும் அவர்களின் இயக்கங்களும் ஆளப்படுபவர்களால் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டவர்கள் தான். அது உலக வழமை. உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடுபவர்கள் எங்கும் பயங்கரவாதிகள் தான். ஏன் பிடல் கஸ்ரோவின் நாடு கூட இன்று அதைத்தான் செய்கின்றது. எதற்காக தமது பொருளாதார நலன்களுக்காக. அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. முஸ்லிம்கள் இயக்கதில் இருந்திருந்தால் உலக நாடுகள் புலிகளின் மீது பயங்கரவாத முத்திரை குத்தியிருக்காது என்ற சாரப்பட நீங்கள் எழுதியிருப்பதை கண்டு அழுவதா சிரிப்பதா? இந்த நிமிடம் வரை ஒவ்வோரு தமிழனும் தமிழ் பேசும் அத்தனை மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எம் குறிக்கோள். எம் போராட்டம் கொள்கை ரீதியில் இன்னும் தோல்வியடையவில்லை. அது ஆயுத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம். அதுவும் ஒரு பிராந்திய பொருளாதார நலனுக்காகவே நடைபெற்ற அழிப்பு. காஸ்மீரை காவு கொள்ளும் இந்தியா, உலக பயங்கரவாத அமைப்பகளுக்கு துணைபோகும் பாக்கிஸ்தான். தன் இன மக்களை அடக்கியாழும் மற்றும் சில நாடுகளின் ஒன்றிணைப்பின் மூலமாகவே அது நிறைவேறியது. பொய்யான புனைக்கதைகளினால் ஒற்றுமை தேட முயலாதீர்கள். முள்ளிவாய்கால் அழிவின் போது சிங்களத்துடன் பால் சோறு உண்டு கூத்தாடி மகிழ்ந்த முஸ்லிம்கைளையும் நான் கண்டுள்ளேன்.

Anonymous said...

podhuvaha oruvarudaiya thai moliyai vaithuthan oru inaththai adaiyala paduthuwarhal anal ilangai muslimgalil 99 veedham tamilai thai mozhiyaha kondawarhal thaan oru thamilan endru solwadhu illai suyanalangalukkaha adippadaihalaiye matri kondawarhal muslimgal