Jun 22, 2011

இலங்கை அரசைக் கண்டித்து தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்! MMK!

JUNE 23, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

இராமேஸ்வரத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு கட­ல் மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன் அவர்களுக்குச் சொந்தமான ஐந்து படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் பரப்பு கடந்த சில நாட்களாக கடும் சீற்றத்துடன் காட்சி அளித்தது. காற்றின் வேகத்தில் திசை தெரியாமல் தவித்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

நடுக்கட­ல் திசை தெரியாமல் பரிதவிக்கும் மீனவர்களை இலங்கை அரசு பத்திரமாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்களைக் கைது செய்வதும் கொடுமைகள் புரிவதும் நிச்சயம் மனித உரிமை மீறலுக்குரிய செயலாகும்.

தொடர்ச்சியாக தமிழக மீனவர்களைக் கொடுமைப்படுத்தும் இலங்கை அரசைக் கண்டித்தும், தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும், தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவைக் கண்டித்தும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் வரும் வெள்ளிக்கிழமை (24.06.2011) அன்று மாலை 4 மணிக்கு இலங்கை துணைத் தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

No comments: