JUNE 2, ஈழத் தமிழினப் படுகொலைகளைக் கண்டித்து வெளிநாடுகளிலே வாழும் பெரும் எண்ணிக்கையான தமிழ் உணர்வாளர்கள் பெல்ஜியம் நாட்டிலே ஒன்றுகூடியுள்ளனர்.
இன்று பெல்ஜியம் நாட்டின் புறுசெல் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் இவர்கள் உணர்வுபூர்வமாக ஒன்றுகூடியுள்ளனர்.
ஐரோப்பிய பாராளுமன்ற இடதுசாரிக்கட்சிகளும் (GUE/NGL) அனைத்துலக மக்கள் அவைகளின் ஏற்பாட்டில் ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்ச்சி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமானது.
* இந்நிகழ்ச்சியில் தமிழீழத்தின் இன்றைய நிலையும், அபிவிருத்தியும் என்ற தலைப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் சின்னத்துரை வரதராஜா உரைநிகழ்த்தினார்.
* தமிழீழத்தின் மற்றைய நிலைமைகள் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்; செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் உரைநிகழ்த்தினார்.
அதில் அவர் குறிப்பிட்டது, தாயகத்தில் இராணுவ அடக்குமுறையில் மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
அங்கு சிங்களமயமாக்கல் என்றுமில்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. மக்கள் தவறான பாதைக்கு வழிநடத்தப்படுகின்றனர்.
தமிழ் மக்கள் தோல்வியடைந்தவர்கள் என்ற நிலைமையிலேயே சிங்கள அரசு நோக்கிவருகின்றது.
இந்த நிலைமாறவேண்டும். சர்வதேச ரீதியிலான பக்கசார்பற்ற ஓர் விசாரணை நடத்தப்படவேண்டும். நாம் இங்கு வந்த காரணத்தால் குற்றம் சுமத்தப்பட்டு கைதுசெய்யப்படலாம். பழிவாங்கப்படலாம்.
இந்நிலையில் நாம் எமது மக்களுக்காக இவற்றை சந்திக்கவும் தயாராக உள்ளோம். தற்போதைய நிலையில் எமது தமிழ் மக்கள் ஒன்றுபட்டு செயற்படவேண்டியதே முக்கியமாகக் கருதப்படுகின்றது போன்ற விசயங்களை முன்வைத்து விரிவாக உரை நிகழ்த்தினார்.
இவரது உரையோடு முதல்கட்ட அமர்வு முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சி மொத்தம் நான்கு கட்ட அமர்வுகளாக நடத்தப்பட உள்ளது. இப்பொழுது இரண்டாம் கட்ட அமர்வு நடந்து கொண்டிருகிறது.
இந்த நிகழ்வில் ம.தி.மு.க.பொதுச் செயலர் வை.கோ உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆர்வலர்கள் உணர்வு பூர்வமாகக் கலந்துகொண்டுள்ளனர்.
சிந்திக்கவும்: வெறும் ஒன்று கூடலோடு அமைந்து விடாமல் இவர்கள் ஏதாவது உருப்படியாக சாதித்தால் நல்லது. இப்போது தேவை ஒற்றுமையே மிக முக்கியமானது. தமிழர்கள் அனைவரும் பிரிவினையை மறந்து ஒன்று பெற்று செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

1 comment:
நிச்சயம் வெற்றி உண்டாகும்........
Post a Comment