Sep 28, 2013

அணுவுலையை மூடக் கோரி அக்டோபர் 2 ல் ஆர்பாட்டம்!

Sep 29/2013: கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை ஜனநாயக வழியில் நடத்தி வருகின்றனர்.

இதை மத்திய, மாநில மக்கள் விரோத அரசுகள் அடக்கு முறைகளை ஏவி ஒடுக்க நினைத்தது. ஆனால் மக்கள் போராட்டங்கள் மேலும் வலுபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு  ஆதரவாக  பல்வேறு தமிழர் இயக்கங்களும், மக்கள் இயக்கங்களும் ஆதரவு கொடுத்து வருகின்றன. 


இந்த நிலையில், அணு உலைக்கு எதிரான கூட்டமைப்பினர் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறக்கோரியும், கூடங்குளம் அணுவுலையை மூடக் கோரியும் அக்டோபர் 2ஆம் தேதி தமிழ் நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் அனைத்து கட்சிகள், இயக்கங்கள் கூட்டமைப்பின் சார்பாக ஆர்பாட்டங்கள் நடைப்பெற இருக்கிறது.

த்ருனத்தில்  POPULAR FRONT OF INDIA இயக்கத்தின் மாநில தலைவர் அவர்கள்  நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதிக்கு நேரில் சென்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் உள்பட அங்குள்ள மக்களை நேரில் சந்தித்து அணுவுலைக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆர்பாட்டத்திற்கு  POPULAR FRONT OF INDIA  ஆதரவு அளிக்கும் என்று கூறினார்.

அணு உலையை  எதிர்க்கும் மக்கள் நல இயக்கங்கள்: POPULAR FRONT OF INDIA, ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் தமிழர் தேசிய இயக்கம், மதிமுக, நம்தமிழர் கட்சி, SDPI, மனித நேய மக்கள் கட்சி, பாபுலர் பிரான்ட் ஆப் இந்தியா, TMMK, விடுதலை சிறுத்தைகள், பாமக, தமிழ் தேச பொதுவுடைமை கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் அமைப்பு, வணிகர் சங்க பேரவை, தமிழ்நாடு மீனவர்கள் சங்கம், மற்றும் சமூக சிந்தனையாளர்கள். 

அணு உலையை ஆதரிக்கும் மக்கள் விரோத இயக்கங்கள்: காங்கிரஸ், திமுக, அதிமுக, பாரதிய ஜனதா, இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிசத், இந்து மக்கள் கட்சி, நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள்கட்சிசுப்பிரமணிய சுவாமி, துக்ளக் சோ, தினமலர், தினமணி, இந்தியா டுடே போன்றவர்கள்.போலி கம்யூனிஸ்ட்கள் கட்சி, 

1 comment:

Anonymous said...

naasakaara anu ulaigalai mooda vendum. ithai purinthu kolvaargalaa mada chaampiraanigal.