Jun 4, 2011

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே! அமெரிக்கா!

JUNE 5,  இலங்கையில் நிகழ்ந்த போர் குற்றங்கள் குறித்த ஐ.நா. அறிக்கை குறித்து அமெரிக்கா மேற்கொண்டுள்ள கொள்கை நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த போரின்போது அப்பாவி தமிழ் மக்கள் மீது இலங்கை இராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்தியதாகவும்,  அதில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் ஐ.நா.  குழுவினரின் அறிக்கை தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டதற்கு ஆதாரங்களையும் அந்த அறிக்கை கொண்டிருக்கிறது.  போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக ஐ.நா. அறிக்கை குற்றம் சாட்டியுள்ளதை அடுத்து ராஜபக்ச அரசு இந்த விஷயத்தில் நம்பிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தெளிவாக தெரிந்த நிலையில், போர் குற்றவிசாரணைகளை இலங்கை அரசு சந்தித்தே ஆகவேண்டும். என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் கூறினார்.

2 comments:

Anonymous said...

கொலைவெறியருக்கு ஆயுதம் பயிற்சி என்பன வழங்கிவிட்டு இப்போது குற்றமற்றவர் போல் அமெரிக்கா பேசித்திரிகின்றது. இதுவும் இந்திய அரசின் செயலை ஒத்ததே. பயமுறுத்தி கொலைவெறியரிடம் ஏதோ சலுகைகளை எதிர்பார்க்கும் வேலைதான் நடக்கின்றது. அல்லாமல் இறந்தவர் மேல் அனுதாபமோ தமிழரின் மீதான பாசமோ அல்ல என்பதனை உணர முடிகிறது.

Anonymous said...

இலங்கையில் நடந்த இனப்படுகொலையை ஒரு இனக்கண் கொண்டு பாராமல் மனித சமுதாயத்தின் ஒரு பிரிவுக்கு நடந்த அநியாயமாக பார்க்கவேண்டும். அப்படி எடுத்துசெல்வதுதான் உண்மையான மனித நேயமாக இருக்க முடியும்.

அதைவிடுத்து நான், என் இனம், என் மதம், என் தேசம், என் மொழி என்ற குறுகிய பார்வையிலிருந்து வெளியே வருவோம்.

எல்லா மக்களும் சம உரிமை பெற நம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோம்.

- MOHAMED THAMEEM