Jun 1, 2011

தீ..........தீ..........தீ.........

நாப்பிளக்கப் பொய்யுரைத்து நன்னிதியம் தேடி
நலமொன்றும் அறியாத நாரியரைக் கூடி
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
புலபுலனெனக் கலகலெனப் புதல்வர்களைப்பெறுவீர் காப்பதற்கும் வகையறியீர்; கைவிடவும்மாட்டீர்; கவர் பிளந்த மரத்தொளையில் கால் நுழைத்துக்கொண்டே ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதன் நிலைப்பட்டீர். -பட்டின‌த்தார்.

இப்படித்தான் இன்றைய மக்கள் நிலை ..
யாருக்கும் விருப்பமில்லை அண்டையாருக்கு உதவ.
தன் ஆயுள் வளர்ப்பதிலேயே குறியாய் இருப்போரின் பயணம் ...
கடிவாளமிட்ட குதிரையாய் போய்க்கொண்டிருக்கிறது.
அவர்கள் பாதைக்கு ஒளியூட்டும் விளக்குகளைகூட
கண்ணெடுத்தும் பாராதவர்கள்...
இருளில் தவிக்கும் மக்களின் வலியையா உணரப்போகிறார்கள் ?
இருளில் அகப்பட்டவன் மட்டுமேயறிவான் ஒளியின் உயர்வை..!

விளக்கிற்கு தலையில் தீ...
அடுப்பிற்கு வயிற்றில் தீ.
நல்மனங்கொண்டோருக்கு நெஞ்சில் தீ ..

நல்லவர்களுள் கழலும் நெருப்பு நிச்சயம் ஒளியூட்டும் நம் சமூகத்திற்கு

                                                          .............யாழினி...........

2 comments:

Anonymous said...

சிந்தனையை தூண்டும் அருமையான பதிவு. நன்றி யாழினி.

Anonymous said...

சும்மா "தீ மாதிரி" உண்மைகள் சுடுகின்றன. அழகிய தமிழில் அழகான கருத்து தொடர்ந்து உங்கள் பதிவுகளை படிக்கிறேன் அருமை.