May 7, 2011

உலக தமிழர்களே வேற்றுமைகளை மறந்து ஒன்றுபடுவோம்!!

May 8, நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்பதை விடுத்து நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்று ஒவ்வொருவரும் நெஞ்சைத்தொட்டுக் கேட்டுப்பார்க்க வேண்டும்.

நாடுகடந்த அரசும், உலகத் தமிழர் பேரவையும், மற்றய அமைப்புகளும் தம்மால் ஆனதைச் செய்யட்டும், அது சரி என்று உனக்குப்பட்டால் ஒத்துழைப்புக் கொடு.

ஒரு வேளை உன்னிடம் அதனைவிடப் பன்மடங்கு திறமை இருக்கலாம். எவன் ஒருவன் மக்கள் அதிகமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய திறமையையும் கொள்கையையும் கொண்டிருக் கிறானோ அவன்தான் தலைவன்.

ஆகவே நீயும் தலைவனாகலாம். உன்னுடைய திறமையை வெளியில் கொண்டுவா, உன் துணிச்சலை வெளியில் கொண்டுவா, உன்னுடைய அர்ப்பணிப்பை வெளியில் கொண்டுவா.

மகாத்மா காந்தி அகிம்சைவழியில் போராடிக்கொண்டு இருந்தபோது சுபாஸ் சந்திரபோஸ் வேறு வழியில் போராடிக்கொண்டிருந்த படியால்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது.

போராட்டங்கள் வேறுபடலாம் போய்ச் சேரவேண்டிய இடம் ஒன்றாக இருக்கவேண்டும்.
நாம் ஆயுதம் ஏந்தத்தேவையில்லை. சர்வதேச நீதிநெறிகளை மீறத்தேவையில்லை,

அறவழிப்பாதையிலே இராஜதந்திரத்தைக் கையில் எடுத்து கத்தியின்றி இரத்தம் இன்றி வரும் யுத்தத்தை எதிர்கொள்வோம்.

சர்வதேச காலநிலை எமக்குச் சாதகமாக இருக்கிறது. அந்தமுகில் எப்போதும் கலையலாம், அல்லது பாதகமான திசைக்குத் திரும்பலாம் ஆகவே இப்போதே செயல்படு.

முப்பத்திமூன்று நாடுகள் எமக்கெதிராக எமது எதிரிக்கு ஆயுதம் கொடுத்ததாக அறிகிறோம். குறைந்தது மூன்று நாடுகள் எமக்கு ஐ.நா வில் நீதிகிடைக்க விடமாட்டார்கள் என்கிற செய்தியும் வருகிறது.

இவர்களை எவ்வாறு எமக்கு ஆதரவாக மாற்றலாம், அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? இவர்கள் வழிக்கு வராவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? எல்லாவற்றிற்கும் மருந்திருக்கிறது.

அன்று அண்ணா சொன்னார் ”நாங்கள் நான்கு கோடி தமிழர்கள் இருக்கிறோம், ஈழத்தமிழனுக்கு ஒரு துன்பமென்றால் இரண்டு கோடி தமிழர்கள் பாக்கு நீரிணைக்குப் பாலமாவார்கள்.

மற்ற இரண்டுகோடி தமிழர்களும் தமிழீழத்தில் இருப்பார்கள் என்று” இன்று அண்ணாவும் இல்லை, அண்ணாவின் பாசறையில் வாழ்ந்த தம்பிகளும் எம்மோடில்லை.

ஆனால் அந்த தம்பிகளை எம்மால் உருவாக்க முடியும் என்பதை முத்துக்குமாரன் தொடங்கி கிருஷ்ணமூர்த்தி வரை உயிரைக்கூடக் கொடுக்கக்கூடிய பல தம்பிகள் எமக்கு நினைவூட்டியிருக்கிறார்கள்.

ஆனால் நீதான் சோர்வாய் இருக்கிறாய். பொறுத்தது்போதும் பொங்கி எழு தமிழா. எதிரியைக் கண்டு அச்சம் கொள்ளும் கோளைகள் எமக்குத் தேவையில்லை.

வாழ்வா சாவா பார்த்துவிடுவோம் ஒருகை என்று வெஞ்சினம் கூறும் வீரர்களே பொங்கி எழுங்கள்.

வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை, இருப்பது ஓர் உயிர் , அது போவதும் ஒருமுறைதான்.

அது எம்மக்களுக்காக, மண்ணுக்காக போகுமானால் அதை விடபெரும்பாக்கியம் வேறொன்றும் இல்லை.

இன்று நீ தூங்கிவிட்டால் இனி என்றும் உன்னால் எழுந்திருக்கவே முடியாது. எம்முன்னால் பெருமளவு வேலை இருக்கிறது. சில அமைப்புகள் நிறையவே செய்கின்றன.

இருந்தாலும் அதன் வேகத்தை இன்னும் அதிகரிக்கவேண்டிய கட்டாயம் எமக்கிருக்கிறது. அவர் செய்வார் இவர் செய்வார் என்று சும்மா இருக்காமல் எம்மால் ஆனதைச் செய்யவேண்டிய காலம் இது.

இது எமக்குக் கிடைத்திருக்கின்ற மிகமுக்கியமான கடைசிச் சந்தர்ப்பம். எல்லோரோடும் புரிந்துணர்வை வளர்த்துக்கொண்டு மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் எமது அறவழிப் போராட்டத்தை முன்நகர்த்துவோம்.

புத்தன் வந்த திசையிலே போர், புனித ஈழமண்ணிலே போர், சத்தியத்தின் நிழலிலே போர், தர்மத்தின் மடியிலே போர்.

போர் மறுபடியும் வீழ்வதில்லை வா - மரணமேனும் பெறுவதென்று வா, கொடியவர்கள் கொட்டமடக்க வா - பொன்னழந்த மண் அழக்கவா - வா - வா. இலங்கையில் நடந்தது இன ஒழிப்புத்தான் என்று கருதுபவர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும்.

அன்புடன் : உலகத்தமிழர் சமாதானப் பேரவை.

1 comment:

Anonymous said...

hahahahahhahaha wot a funny