May 30, கடந்த 15 வருடங்களாக தேடப்பட்டுக் கொண்டிருந்த சேர்பிய போர்க் குற்றவாளி ரட்கோ மிலாட்விஜ் கைது செய்யப்பட்டுள்ளான்.
இவனது கைது உலகில் உள்ள ஜனநாயக விரும்பிகள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையை பிறப்பித்துள்ளது.
1990 களில் முன்னாள் யுகோசுலாவியா துண்டு துண்டாக பிரிந்தபோது சேர்பிய இராணுவத்திற்கு இவன் தளபதியாக இருந்தான்.
அத்தருணம் அரச இராணுவத்தைப் பயன்படுத்தி இளைஞரும், பெரியோரும், முதியவருமாக 8.000 முஸ்லிம்களை படுகொலை செய்தான்.
இவனுடைய படுகொலை சேர்பிய முஸ்லீம்களுக்கு எதிரானது, போர் என்ற பொதுமைப்பட்ட கருவியை இனத்துவேஷத்துடன் பயன்படுத்தியது இவன் புரிந்த குற்றம்.
இப்போது கைது செய்யப்பட்ட ரட்கோ மிலாட்விஜ் செய்த கொலைகளும் மகிந்த, கோத்தபாய, சரத்பொன்சேகா அன் கொம்பனி செய்த கொலைகள் போன்றவைதான்.
சேர்பிய முஸ்லீம்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்ற மத, இன வெறுப்பின் பாற்பட்ட போர் துஷ்பிரயோகமாகும்.
இத்தகைய போர்களை நடாத்துவதும், அதற்கு துணை போவதும் மரண தண்டனைக்குரிய குற்றம் என்பதை மரணமடைந்த முன்னால் சேர்பிய அதிபர், தளபதி ரட்கோ மிலாட்விஜ் மீதும் ஹேக் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் உறுதி செய்யப்பட்டது.
சிறீலங்கா சிங்கள இனவாதிகள் கத்தித் திரிவதைப்போல மிலாட்விஜ் ஒரு சேர்பிய கதாநாயகன் என்று ஓர் ஊர்வலம் சேர்பிய தலைநகர் பயோகோட்டில் நடைபெற்றது. அது ஊர்வலம் முடிந்த கையோடு சுருண்டுவிட்டது.
அதுபோல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முள்ளிவாய்க்காலில் நடாத்திய கற்பழிப்பு, படுகொலை, வெள்ளைக்கொடி கொலை, பொதுமக்கள் மீதான குண்டுவீச்சு என்று 140.000 பேருடைய மரணத்திற்கும், புதைந்து கிடக்கும் மண்டையோட்டுக்கும் பதில் சொல்ல வேண்டியது தீவிரவாதி ராஜபக்சேவின் அவசியம்.
இலங்கையில் நடந்துள்ளது பயங்கரவாதத்திற்கு எதிரான போரல்ல சர்வதேச போர்க்குற்றம். யுகோசுலாவியாவில் நடந்தது போன்ற போர்குற்றச் செயலே, இதை ஐ.நா. அறிக்கை தெளிவாக வரையறை செய்துள்ளது.
சிறீலங்காவுக்கு உதவிய சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் போர்க்குற்றத்தில் சிறீலங்கா ஈடுபடும் என்று எமக்கு தெரியாது என்று தப்பிக்க யாதொரு முகாந்திரமும் இல்லை.
மிலாட்விஜ்ற்கு ஒரு நீதி, சிறீலங்கா போர்க் குற்றவாளிகளுக்கு ஒரு நீதி என்று கூற உலக சட்டத்தில் இடமில்லை. சர்வதேச சட்டத்தின் முன் யாவரும் சமம்.. இதை சீனாவும் இந்தியாவும் மறுக்க யாதொரு முகாந்திரமும் இல்லை.
ஒல்லாந்து ஹேக் போர்க்குற்ற நீதிமன்றில் சலபொடான் மிலேசெவிச்சிற்கு போர்க்குற்ற மரண தண்டனை விதிக்கப்பட்டதை பார்த்த பிறகும் சிறீலங்காவில் அது மீறப்பட்டுள்ளது. ஆகவே சர்வதேச சட்டத்தை கடுகளவும் கணக்கில் எடுக்காத செயல் என்பதை இந்தியாவும் சீனாவும் உணர்வது அவசியமல்லவா..?
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
எங்கேயடா சுதந்திரம் ? பூமியை ஏனடா கட்டி அழுகிறீர்கள் ? எனக்கு என் வீட்டில் வாழ அனுமதி உள்ளதுபோல், என் நாட்டில் அது எனது நாடு என்று சொல்லி வாழ அனுமதி இல்லையா ? இடையில் 60 ஆண்டுகளாக என் வீடு உன் வீட்டுக்கு பக்கத்தில் இருந்ததால் என் வீட்டோடு உன் வீட்டையும் சேர்த்து வேலி அடைத்துக்கொண்டு என் வீட்டையும் உன் வீடு என்று உரிமை கொண்டாடுவதும் அதை "உன் வீடு என்று சொல்வதுநியாயமில்லை" என்றால் நான் தீவிரவாதியா?
என்ன நியாயமாடா இது? இதைத்தானே எம் தமிழ் இனம் இலங்கையில் கேட்டது. கேட்டதற்காக குரலைக்கூட அடக்கவில்லை. குரல் வளையையே கடித்து குதறிநீர்களே மிருகங்களே. நாம் ஓயமாட்டோம். எங்கு உரிமைக்காக குரல் ஒலிக்கிறதோ எம் குரலும் அவர்களோடு சேரும்.
Post a Comment