May 26, 2011

மாறுவாரா ஜெ!! மக்கள் எதிர்பார்க்கின்றனர்!!

May 27, அரசு திட்டங்கள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள் வாய் திறக்க கூடாது என்ற நிலையை, முதல்வர் ஜெயலலிதா மாற்ற வேண்டும்' என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான முந்தைய ஆட்சியின் போது, அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து அவர் மட்டுமே பேசுவார்; அறிவிப்புகளை வெளியிடுவார்.

விழாக்களிலும், செய்தியாளர்கள் கூட்டத்திலும் அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்பட எவரும் வாய் திறக்க மாட்டர்.

மக்களுக்கு உத்தரவாதம் வழங்குதல், நம்பிக்கையான வாக்குறுதி அளித்தல் போன்றவற்றுக்கும் இவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மீறுபவர்கள் பதவி பறிக்கப்பட்டதும் உண்டு.

தீர்க்கக்கூடிய பொதுவான பிரச்னையை சாதாரண மனிதன், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனுவாக அனுப்பி, அது முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, நிறைவேற்றப்பட்ட பல சம்பவங்கள் உண்டு.

ஆனால், அமைச்சர், அதிகாரிகளிடம் மனுவாக கொடுத்து, அது நிறைவேறிய சம்பவம் மிகச்சொற்பம் தான். அரசு விழாக்களில் அமைச்சர்கள் பேசும் போது கூட, "அம்மா அவர்கள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தான் கூறுவார்களே தவிர, தங்கள் துறை தொடர்பான தகவல்கள், முன்னேற்றங்கள், திட்டங்கள் பற்றி வாய் திறக்க மாட்டார்கள் இந்நிலை மாறுமா? மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments: