May 4, 2011

ஸ்டெர்லைட் அதிபயங்கர ஆள்கொல்லி ஆலை!!

May 5, சுற்றுச்சூழல் சட்டத்துக்கு எதிராக திறக்கப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு நேஷனல் ட்ரஸ்ட் என்ற அமைப்பு வழக்கு ஒன்றை பதிவு செய்தது.

இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை 14 ஆண்டுகள் கழித்து செப்டம்பர் 29, 2010 அன்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியது. 1995இல் ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் ஆணையத்தின் இசைவு சட்டத்துக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் சட்டத்தின்படி நடத்தப்பட வேண்டிய இந்த ஆலையால் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாறுபாடுகளை கண்டறியும் கணிப்பு நடத்தப் படவில்லை, மேலும் பொதுமக்களின் கருத்து கேட்கும் கூட்டமும் நடத்தப்படவில்லை.

இந்த ஆலைக்கு என நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை விதிகளையும் இந்த ஆலை மீறியுள்ளது. இந்த விதி மீறல்கள் சுற்றுச்சூழல் அமைச்சகத்தாலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தாலும் பலமுறை கண்டும் காணாமல் விடப்பட்டுள்ளன என்று அந்த தீர்ப்பில் சொல்லப்பட்டு இருந்தது.

இந்த தீர்ப்பு நடைமுறைக்கு வரும் முன் அக்டோபர் 1, 2010 அன்று ஸ்டெர்லைட் ஆலையை உச்ச நீதி மன்றத்தில் ஒரு தடை உத்தரவை வாங்கியது. இந்த வழக்கு இன்னும் எத்தனை வருடங்கள் நடக்குமோ. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் பாதிக்கப்பட்டு கொண்டிருப்பது தூத்துக்குடி மக்கள் என்பதுதான் உண்மை.

ஸ்டெர்லைட் ஏற்கெனவே மோசமான பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. நிலத்தடி நீர் மாசடைந்து குடிப்பதற்கு பயனற்ற நிலையில் உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்பு ஒட்டுமொத்த தூத்துக்குடியின் குடிநீரும் (நிலத்தடி நீர்) மாசடைந்து தூத்துக்குடியில் மிகப்பெரிய குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.

No comments: