Apr 20, 2011

அமெரிக்கா மீது வீண் பழிசுமத்தும் போர் குற்றவாளி!!

APREL 21, ராஜீவ் காந்தி மற்றும் ஜனாதிபதி பிரேமதாச ஆகியோரைப் படுகொலை செய்ய விடுதலைப் புலிகளைத் தூண்டியது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தான் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டுகின்றார்.

அது மாத்திரமன்றி விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட 47 முக்கியஸ்தர்களைப் பாதுகாக்கவும் முயற்சித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாடொன்றில் வைத்தே அவர் மேற்கண்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் வடக்கில் தமிழ் சிவிலியன்கள் கொல்லப்பட்டதற்குக் காரணம் இராணுவத் தாக்குதல்கள் அன்றி அந்த மக்களை மனிதக் கேடயங்களாக விடுதலைப் புலிகள் அமைப்பு பயன்படுத்தியமையே ஆகும்.

அதே நேரம் யுத்த காலத்தில் சிற்சிறு தவறுகளை மேற்கொண்ட இராணுவத்தினரை அரசாங்கம் உடனுக்குடன் தண்டித்திருக்கின்றது. இராணுவத்தின் கட்டுக்கோப்பு குலையாத வகையில் அவர்கள் செயற்பட மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

அதன் காரணமாக அவர்கள் தவறு செய்யவே அஞ்சினர். அவ்வாறான நிலையில் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை மூலம் இலங்கை அரசாங்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளும் அடிப்படையற்ற பிதற்றல்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிந்திக்கவும்: ராஜபக்சே இனவெறி கொலைகார கூட்டம் இப்பொது அமெரிக்கா மீது வீண்பழி சுமத்துகிறது. ஐநாவை மிரட்டி பார்க்கிறது, எப்படியாவது இந்த விசாரணையில் இருந்து தப்பித்து விடலாம் என்று கனவு காண்கிறது.

இந்த கொலைகார கூட்டம் வெகு விரைவில் தண்டிக்கப்படுவார்கள். சொந்த நாட்டு குடிமக்களை கொன்று குவிப்பதில் சிங்கள இனவெறி அரசும், இந்தியாவும் ஒரு ஒருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பது உலகறிந்த உண்மை.

2 comments:

Anonymous said...

இந்த கொலைவெறியருக்க நடுக்கம் தொடங்கிவிட்டது. தாம் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம், குளிர்காச்சலில் ஏதேதோ பிதற்றுகிறார்கள். தண்டனை நிச்சயமாக இந்த கொலைவெறி கூட்டத்திற்கு வழங்கப்படவேண்டும். அனைத்து தமிழரின் வேண்டுகோள் இது.

Anonymous said...

hahahahahahahahha gud joke we r lankans ma