
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் தேர்தல் நிலைப்பாடு குறித்து முடிவு எடுப்பதற்காக கூடிய மதிமுகவினர் சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சியை அவமதித்த ஜெயலலிதாவுக்கு சரியான பாடம் புகட்டுவோம் என்று தெரிவித்தனர்.
திருமங்கலத்தில் திமுக வேட்பாளர் மணிமாறனை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக, மதிமுக நகர இளைஞரணி செயலாளர் போஸ் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், உதயசூரியன் உதிக்கட்டும். எங்கள் தலைமை உத்தரவு போட்டுவிட்டது.
எந்த தியாகத்தையாவது செய்து மணிமாறனை வெற்றி பெறச் செய்வோம். அதிமுகவுக்கு பாடம் புகட்ட இதுதான் சரியான நேரம் என்றார். இதேபோல் ராஜபாளையத்தில் நாங்கள் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை தோற்கடிப்போம் என்றார்.
இதேபோல் வாசுதேவநல்லூர் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கணேசனை ஆதரித்து மதிமுக தொண்டர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment