Apr 9, 2011

நியூயார்க் நகரம் கடலில் மூழ்கும் அபாயம்!!

உலகின் வெப்ப அதிகரிப்பின் காரணமாக கடலில் மூழ்கவுள்ள நகரங்கள் வரிசையில் நியூயார்க் நகரம் முன்னணியில் இருப்பதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது.

படிப்படியான வெப்ப அதிகரிப்பு நிகழும் பட்சத்தில் எதிர்வரும் 2100 ம் ஆண்டில் நியூயார்க் முற்றாக கடலில் மூழ்கி விடும் அபாயம் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மகாநாட்டில் இது சம்மந்தாமான தகவல் வெளிவந்துள்ளன. நகரம் கடலில் மூழ்கக்கூடிய அபாயத்தை எதிர்கொண்டுள்ள ஏனைய நகரங்களை விட இருபது வீதம் அதிகமான ஆபத்தை எதிர் கொண்டுள்ளது.

ஆர்க்டிக் சமுத்திர பிரதேசம் மட்டுமே குறைந்தளவான பாதிப்பை எதிர்கொள்ளும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்ததாக வான்கூவரின் டாஸ்மானியா பிரதேசம் மற்றும் மாலைதீவு என்பனவும் அவ்வாறு கடலில் மூழ்கக் கூடிய அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.

மேலும் உலகின் வெப்ப அதிகரிப்பின் காரணமாக எதிர்வரும் காலங்களில் கடல் சூறாவளி மற்றும் குறுகிய கால புயல் அபாயங்களையும் அடிக்கடி எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

No comments: