ஏப்ரல் 20, தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் ‘49 ஓ’ என்ற விதியை பயன்படுத்தலாம். வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பட்டியல் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும்.
வாக்காளர்கள் ‘49 ஓ’வை பயன்படுத்த வேண்டும் என்றால் வாக்குச்சாவடி அதிகாரியிடம் சென்று கூற வேண்டும். அதற்கு அவர் ஒரு படி வத்தை கொடுத்து பூர்த்தி செய்ய சொல்வார்.
பூத் அறையில் தனியாக ஒரு பதிவு நோட்டு வைக்கப்பட்டிருக்கும். அதில் பதிவு செய்து கையெழுத்திட்டு விட்டு செல்லலாம்.
தேர்தலில், யாருக்கும் ஓட்டு போட விரும்பவில்லை என்கிற, "49 ஓ' பிரிவு, குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
வாக்காளர்களுக்கு செய்தித்தாள், ஓட்டுச்சாவடி ஆகியவற்றில் "49 ஓ' பிரிவு குறித்து விளம்பரப்படுத்தப்பட்டது.
தேர்தல் கமிஷனின், இந்த நடவடிக்கையால், தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் மத்தியில், "49 ஓ' பிரிவு குறித்து மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

1 comment:
If you want to know full details about 49 o . . Pls visit www.kingraja.co.nr
Post a Comment