
கோத்ரா,பிப்.15: 2002-ல் குஜராத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய கலவரத்தின் போது பஞ்சமகால் மாவட்டத்தில் 28 முஸ்லிம்களை கொன்று புதைத்து விட்டார்கள். இந்த புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டி எடுத்து அதன் மூலம் குஜராத் கலவரத்தின் போது முஸ்லிம்கள் ஆயிர கணக்கில் கொல்லப்பட்டு இதுபோல் புதைக்கபட்டார்கள் என்ற உண்மையை பிரபல மனிதவுரிமை ஆர்வலர் தீஸ்தா செடல்வாட் வெளி கொண்டுவந்தார். இதன் காரணமாக பயங்கரவாதி மோடியின் அரசு இவர் மீது பொய் வழக்கு தொடர்ந்தது. இதனால் இந்த வழக்கில் போலீஸ் தன்னை கைது செய்யக்கூடும் என்று கருதிய தீஸ்தா, முன் ஜாமீன் கோரி குஜராத் கலவர வழக்கை விசாரிக்கும் விரைவு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு செவ்வாய்க்கிழமை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. குஜராத் முதல்வர் பயங்கரவாதி மோடி குஜராத் இனப்படுகொலை விசாரணைகளை தொடரவிடாமல் தொடர்ந்து இடையூறு செய்து வருகிறார்.

இந்த விசாரணைகளை வேறு மாநிலங்களுக்கு மாற்றவேண்டும் என்று மனித வுரிமை அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. ஹிட்லர் போன்ற உலகம் அறிந்த பயங்கரவாதிகள் பட்டியலில் மோடியின் பெயரும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிட தக்கது. குஜராத் விசயத்தில் நீதி கிடைக்க NCHRO - போன்ற மனித வுரிமை அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2 comments:
நீங்கள் சொன்னமாதிரி குஜராத்தில் முஸ்லீகள் தாக்கப்பட்டது உண்மை. அது ஒரு தனி சம்பவம் அல்ல. அதற்க்கு முன் நடந்தவைகளின் எதிரொலிதான் அது. பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு. அங்கு முஸ்லீம் சகோதரர்கள் நிம்மதியாக வாழ முடிகிறதா ?.தினம் குண்டு வெடிக்கிறது அங்கு யார் குண்டு வைக்கிறார்கள் மோடியா ?. அதுபோல ஆப்கானிஸ்தான். ஆகவே அரசியல் வாதி மற்றும் மத குருமார்களின் பேச்சில் மயங்காமல் சகோதரத்துவம் பேணுவோம்.குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. இன்றும் ஏராளமான முஸ்லீம் சகோதரனும் இந்து சகோதரனும் ஒற்றுமையாய் இருப்பதை நான் காண்கிறேன். நம்மக்குள் ஒரு பகையும் இல்லை. நடந்தது நடந்தவையாக இருக்கட்டும் நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
அன்புள்ள சகோ விஜயன் அவர்களுக்கு குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு முஸ்லிம்கள் செய்தார்கள் என்று நிருபிக்கபடவில்லை இது ஒன்று. அடுத்தது அப்படி அந்த குற்றத்தை யார் செய்தாலும் சட்ட பூர்வமாக தண்டிக்க படவேண்டிய வர்களே!! நீங்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அது அடுத்த நாட்டு விஷயம் அதை அவர்கள் பார்த்து கொள்வார்கள். நாம் நமது நாட்டு பிரச்சனைகளை பற்றி பேசுவதே சரியாக இருக்கும். அவர்களுக்கும் நமக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நீங்கள் முஸ்லிம்கள் ஹிந்துக்கள் என்று பிரித்து பேசவேண்டாம். இங்கு மனிதர்களை பற்றி மனித நேயத்தை பற்றி மட்டும் பேசலாம். அஜ்மீர் முதல் மலோகேன் வரை நடந்த தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தியது ஹிந்துத்துவா என்பது நிரூபணம் ஆகியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்தியாவில் நடத்திய கலவரங்கள் எத்தனை? எத்தனை? குஜராத் கலவரத்தை முழுக்க முழுக்க முன்னின்று நடத்தியது மோடிதான். இதை மனித நேயம் உள்ள யாரும் மறுக்க முடியாது. இங்கு விமர்சிக்கப்படுவது பாசிச சிந்தனை உடைய ஹிந்துத்துவா இயக்கங்களை பற்றியே. தீவிரவாததிர்க்கும் மதத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை நமது கருத்து. இந்து மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றே இது போன்ற செய்திகள் வெளியிடபடுகிறது. வேற எந்த தவறான நோக்கமும் இல்லை. அப்பாவி ஹிந்து இளைஞ்சர்கள் இவர்கள் வலையில் விழாமல் தடுக்கும் நோக்கத்தோடும், இந்த செய்திகளை மக்கள் மன்றத்தில் மறைக்க பட்ட நீயாங்களை வெளி கொண்டுவருவதே நோக்கம் மற்றபடி ஒன்றும் இல்லை. பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் குண்டுவைப்பது மோடியா? என்று கேட்பது மூலம் நீங்கள் மோடியை சரி காண்கிறீர்களோ என்று என்ன தோன்றுகிறது. மோடி
Post a Comment