
சிந்திக்கவும் :அடபாவிகளா!! தமிழக மீனவர்களை வைத்து ஒட்டு வேட்டையை துவங்கிவிடீர்களா!! இறுதிகட்ட போரில் தமிழர்கள் லட்ச்சத்துக்கும் அதிகமாக கொள்ளப்படும் போது அமைதி காத்தீர்கள். இதுகாலம் வரை ஆயிரக்கணக்கில் தமிழக மீனவர்கள் கொல்லபடும் போதும் அமைதி காதீர்கள். இப்பொது தேர்தல் வந்துவிட்டது அல்லவா? ஒட்டு பொறுக்கவேண்டும் அல்லவா? அதனால் ஆரம்பித்து விட்டார்கள் போராட்டத்தை. இதே போராட்டத்தை ஈழ தமிழர்கள் கொல்லப்படும் போது செய்திருந்தால் இவ்வளவு தமிழர்கள் செத்திருக்க மாட்டார்களே!! ஆட்சி வேண்டும்! அதிகாரம் வேண்டும்! பணம் வேண்டும்! புகழ் வேண்டும் மக்கள் எப்படி செத்தாலும் கவலை இல்லை. உலகில் உள்ள அத்தனை மனித உரிமை இயக்ககளும் குரல் கொடுத்ததே உங்களுக்கு ஆட்சிதானே முக்கியமாக பட்டது. செத்தது உங்கள் உறவு அல்லவே!! உங்களை ஜெயலிதா போலீஸ்சை வைத்து இழுத்து வந்த போது அதை எத்தனை முறை திரும்பத்திரும்ப உங்கள் டிவிகளில் காட்டினீர்கள். எத்தனை கூப்பாடு போட்டீர்கள். மறந்துவிட்டதா? தமிழின தலைவர் என்று சொல்லிக்கொள்ள என்ன யோக்கிதை இருக்கிறது உங்களுக்கு! நடுநிலையோடு சிந்தியுங்கள் மக்களே!!
அன்புடன்: ஆசிரியர் புதியதென்றல்.
1 comment:
நாட்டுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற பசி இல்லை ! இவர்களுக்கு இது ஓட்டு பசி ! இவர்களை உடம்பில்
உப்பை தடவி எந்த சூரியனுக்கஹா ஓட்டு வேட்டையாடுகிறார்களோ ! அந்த சூரியன் சுட்டேரிக்கும்
நாடு பகலில் இவர்களை மைதானத்தில் நிறுத்தவேண்டும்.
Post a Comment