
வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களில் அரசியல் உட்பட அனைத்து துறைகளிலும் பின் தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு 10% தொகுதிகளை ஒதுக்க வேண்டும். அது போன்று இடஒதுக்கீட்டை 5% உயர்த்துவது வக்ஃபு வாரிய சொத்துகளை முறைபடுத்துவது அதில் அதிக நிதிகளை ஒதுக்குவது முஸ்லிம்களுக்கு வட்டியில்லா கடன்கள் வழங்குவது போன்ற வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் வழங்க வேண்டும். ஊழலை ஒழிக்க சரியான செயல் திட்டங்களையும் 'லோக் அறகிதா' போன்ற ஊழல் ஒழிப்பிற்கான அமைப்புகளை ஏற்படுத்துவதையும் வாக்குறுதியாக அளிக்க வேண்டும். தீண்டாமை கொடுமைகளை முற்றிலும் ஒடுக்கும் செயல் திட்டங்களையும் அதில் அறிவிக்க வேண்டும். எஸ்.டி.பி.ஐ. வரும் தேர்தலில் மேற்கண்ட வாக்குறுதிகளோடு சட்டமன்ற தேர்தலில் அதிக பிரதிநிதித்துவத்தை எஸ்.டி.பி.ஐ.க்கு தரும் கட்சிகளோடு கூட்டணி வைத்து போட்டியிடுவோம். அல்லது 25 தொகுதிகளில் தனித்து எஸ்.டி.பி.ஐ. போட்டியிடும். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். எஸ்.டி.பி.ஐ. 60 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இத்தேர்தலில் விளங்கும்." இவ்வாறு செய்தியாளர்களிடம் எஸ்.டி.பி.ஐ.யின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி கூறினார்.
2 comments:
Masha Allah.. Good Decision From SDPI
Insha Allah will be good
Post a Comment