Jan 11, 2011

லட்ச்சாதிபதி ஆகவேண்டுமா??? தேடுங்கள் இவர்களை.

புதுடெல்லி,ஜன.11:சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என தேசிய புலனாய்வு ஏஜென்சி(NIA) அறிவித்துள்ளது. சமீபத்தில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் பயங்கரவாதி அஸிமானந்தா அளித்த வாக்குமூலத்தின் மூலம் கடந்த 2007ம் ஆண்டு மே18-ல் 68 பேர் பலியாக காரணமான சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்திலும் ஹிந்து பயங்கரவாதிகளின் பங்கு வெட்டவெளிச்சமானது.

அச்சமயத்தில் நடைபெற்ற அஜ்மீர், மற்றும் மலேகான் குண்டுவெடிப்பில் பங்குகொண்ட தீவிரவாதிகளான சந்தீப் டாங்கே மற்றும் ராம்சந்ர கல்சங்கரா ஆகியோருக்கும் சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பது தேசிய புலனாய்வு ஏஜென்சியின் விசாரணையில் தெரியவந்தது. ஆகவே தலைமறைவான சந்தீப் டாங்கே மற்றும் ராம்சந்ர கல்சங்கரா ஆகியோர் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என தேசிய புலனாய்வு ஏஜென்சி அறிவித்துள்ளது.

முன்னதாக சி.பி.ஐ-யால் விசாரிக்கப்பட்டுவரும் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட சந்தீப் டாங்கே மற்றும் ராம்சந்ர கல்சங்கரா ஆகியோர் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் புதுடெல்லியிலுள்ள என்.ஐ.ஏ அலுவலக எண்ணை(1-29947020, 011-29947021) தொடர்பு கொள்ளவும்.

No comments: