ரே பரேலி, ஜன.3: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குறுக்கு விசாரணை திங்களன்று நடைபெற்றது. சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தாவிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது. பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பாதுகாவல் அதிகாரியாக அஞ்சு குப்தா நியமிக்கப்பட்டிருந்தார். பாபர் மசூதி இடிக்கப்பட்ட 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி அவரும் அத்வானிக்கு அருகே இருந்தார். இது தொடர்பாக அவரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.எதிர்த்தரப்பு வழக்கறிஞர் எல்.பி. சிங் அவரிடம் கேள்விகள் கேட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 25-ம் தேதிக்கு நீதிபதி விஷ்ணு பிரசாத் அகர்வால் ஒத்திவைத்தார்.
முன்னதாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த அஞ்சு குப்தா, பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு சற்றுமுன்னர் சங்க பரிவார் தொண்டர்கள் மத்தியில் பேசிய அத்வானி, அவர்களது உணர்ச்சியைத் தூண்டும் வகையில் உரையாற்றினார் என்று குறிப்பிட்டிருந்தார். நவம்பர் 19-ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பத்திரிகை புகைப்படக்காரர்கள் தாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
சூடா செய்தி...
தகவலுக்கு நன்றி..
Post a Comment