புதுதில்லி, டிச. 23: ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர். சிபிஐ தன்னை அழைத்து விசாரிப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் சதியே காரணம் என்றார் அவர்.
தில்லியில் சிபிஐ அலுவலகத்துக்கு வெளியே செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
தீவிரவாதி இந்திரேஷ் குமார் ஆர்எஸ்எஸ் மத்திய காரியக் குழு உறுப்பினராக உள்ளார். எனக்கும் மெக்கா மசூதி குண்டு வெடிப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனக்கு தொடர்பு இருப்பதாக கூறுவது இட்டுக்கட்டப்பட்டது. நான் வெளிப்படையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். ஆர்எஸ்எஸ் இயக்கத்துடனான எனது தொடர்பில் ஒளிவுமறைவு இல்லை. எனது வாழ்வை தேசத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டுள்ளேன் என்றார் அவர்.
ஹைதராபாதில் உள்ள மெக்கா மசூதியில் கடந்த 2007-ம் ஆண்டு மே 18-ம் தேதி வெள்ளிக்கிழமை தொழுகையின்போது குண்டு வெடித்தது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். 70 பேர் காயமடைந்தனர். பைப்பில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை செல்போன் மூலம் வெடிக்கச் செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
இந்தச் சம்பவத்தை சிபிஐ விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் தேவேந்திர குப்தா மற்று லோகேஷ் சர்மா இருவரும் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இவர்கள் இருவருக்கும் இந்து அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக போலீஸôர் தெரிவித்தனர். இவர்கள் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய சந்தீப் டாங்கே, ராமச்சந்திர கல் சங்ரா ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளனர். மேலும் சுவாமி ஆசிமானந்திடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் சுனில் ஜோஷி மத்திய பிரதேசத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தின் சதியில் இந்திரேஷ் குமாருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு, தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு விசாரணைக்கு வருமாறு அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
இதையடுத்தது இந்திரேஷ் குமார் சிபிஐ அலுவலகத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜரானார். அப்போது அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment