ராய்ப்பூர், டிச.24- சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டு போராளிகளுடன் டாக்டர் பினாயக் சென்னுக்கு உள்ள தொடர்பை உறுதிபடுத்திய நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, ஏற்கெனவே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட அவரை நீதிமன்ற வளாகத்தில் ராய்ப்பூர் போலீஸார் உடனடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இந்தியாவுக்கு எதிரான போராட்டத்தில் அவர் குற்றவாளி என்று ராய்ப்பூர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் இயக்கத்தினர் நகர்ப்புறங்களிலும் செயல்பட டாக்டர் பினாயக் சென் உதவினார் என்று போலீஸார் தங்களது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தனர். 2007, மே மாதம், மாவோயிஸ்ட் தலைவர் சன்யாலை சிறையில் சந்தித்துப் பேசி, அவரிடம் இருந்து ரகசியமாக கடிதங்களை பெற்றுச் சென்று மாவோயிஸ்ட் போராளிகளுடன் கொடுக்க முயன்றபோது டாக்டர் பினாயக் சென் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment