அமெரிக்கா விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்திருந்தாலும் அந்நாட்டில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு செயல்பட அனு மதிக்கப்பட்டுள்ளது. இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் தீர்ப்பாயம் விடு தலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை உறுதி செய்வது தவறு என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:- கடந்த மே 14-ந்தேதி விடு தலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறி விப்பாணை ஒன்றை வெளியிட்டது. இதுபற்றி விசாரித்த தீர்ப்பாயம் புலிகள் மீதான தடை நீட்டிப்பை உறுதி செய்தது. மேலும் அதை சட்ட விரோத அமைப்பாக அறிவித்து கடந்த நவம்பர் 12-ந்தேதி தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பானது இயற்கை நீதிக்கு முரணானது.
மத்திய அரசு வெளியிட்ட அரசாணையில் புலிகள் இயக்கம் தமிழ்நாட்டின் பகுதியையும் சேர்த்து தனி நாடு வேண்டி போராடுவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று கூறி உள்ளது. அமெரிக்கா விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்திருந்தாலும் அந்நாட்டில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு செயல்பட அனு மதிக்கப்பட்டுள்ளது.
போரில் சிதறடிக்கப்பட்ட புலிகள் உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் ஒன்று கூடி மீண்டும் போராடுவார்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையில் கூறி இருப்பது தவறு. ஈழ போராட்டம் தொடர்பாக செய்திகள் வெளியாகும் இணைய தளங்கள் யாவும் புலிகள் இயக்கத்திற்கு சொந்தமானதல்ல. இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் தீர்ப்பாயம் விடு தலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை உறுதி செய்வது அதனை சட்ட விரோத அமைப்பு என அறிவித்தது தவறு. எனவே தீர்ப்பாயத்தின் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் வைகோ குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கு வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment