தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இலங்கைக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. டென்மார்க்கில் வசித்து வரும் மூன்று புலி ஆதரவாளர்கள் நெதர்லாந்தில் உள்ள அனைத்துலக நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டிய மனோகரன், பொன்னம்பலம், தம்பையா ஆகியோரே இவ்வாறு வழக்குத் தொடர்ந்துள்ளனர். இலங்கை அரசாங்கம் போர்க் குற்றங்களை மேற்கொண்டதாகத் தெரிவித்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
டென்மார்க் சட்டத்தரணி ஜோன் எல்ம்க்யூட்ஸ் என்பரிவினால் புலி ஆதரவாளர்களின் சார்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வழக்கு விசாரணைகளின்போது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் இலங்கை அரசாங்க அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோர் 111 நாடுகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் அனைத்துலக நீதிமன்ற பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வழக்குத் தொடர்ந்த குறித்த புலி ஆதரவாளர்கள் மாதாந்தம் ஒரு லட்சம் யூரோக்களை புலிகளுக்காக திரட்டியுள்ளதாக திவயின சுட்டிக்காட்டியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment