புதுடெல்லி,நவ.2:கஷ்மீருக்கு சுதந்திரம் வழங்கவேண்டுமென்ற தனது டெல்லி கருத்தரங்கு உரையின் பெயரால் தன் மீது தேசத்துரோக குற்றம் சுமத்தி வழக்கு பதிவுச் செய்வதில்லை என மத்திய அரசு முடிவெடுத்த பொழுதும் சில தேசிய ஊடகங்களும்,ஹிந்து பாசிச தீவிரவாத அமைப்பினரும் தனக்கு தண்டனை பெற்றுத்தந்தே தீருவது என கச்சைக்கட்டி களமிறங்கியுள்ளனர்.என்னை ஒழித்துவிடுவோம் என தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்ஸும், பஜ்ரங்தள்ளும் வெளிப்படையாக அறிவித்துவிட்டனர் என பிரபல எழுத்தாளரான அருந்ததிராய் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாசிச பா.ஜ.கவின் பெண் அமைப்பான மஹிளாமோர்ச்சா தொண்டர்கள் டெல்லியில் அருந்ததிராயின் வீட்டை தாக்கியதைத் தொடர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "ஏராளமானோரின் மரணத்திற்கு காரணமான அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்ஸின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ்குமாரை சி.பி.ஐ குற்றவாளியாக்கியதை திசை திருப்புவதற்காக நடத்திய முயற்சிதான் பா.ஜ.கவின் மஹிளா மோர்ச்சா நடத்திய தாக்குதல் என்பது நமக்கு புரியவரும்.
ஆனால், தேசிய ஊடகங்கள் ஒரு பிரிவு இதனைப் பிடித்துக்கொண்டு திரிவது ஏன்? ஒரு குண்டுவெடிப்பின் குற்றவாளியை விட ஆபத்தானவளா இந்த எழுத்தாளர்? எனது வீட்டில் மஹிளா மோர்ச்சா அமைப்பினர் தாக்குதல் நடத்துவதற்கு முன்பே அதனை படமெடுப்பதற்காக பிரபல தொலைக்காட்சி சேனல்களின் ஒ.பி வேன்கள் என் வீட்டிற்கு அருகே வருகைப் புரிந்தன. இனிமேலும் ஒ.பி வேன்கள் என் வீட்டின் சுற்றுவட்டாரத்தில் சுற்றுவதை கண்டால் தங்களுக்கு தெரிவிக்கவேண்டும் என போலீஸ் கூறியுள்ளது.
ஒ.பி வேன்கள் என் வீட்டை வட்டமிட ஆரம்பித்தால் அதற்கு காரணம் ஏதேனும் கும்பல் என் வீட்டை நோக்கி வருகிறது எனப் பொருளாகும்.
கடந்த ஜூனில் பி.டி.ஐ செய்தி நிறுவனம் என்னைக் குறித்து அவதூறானச் செய்தியை வெளியிட்டதைத் தொடர்ந்து மோட்டார் பைக்கில் வந்த இருவர் என் வீட்டின் மீது கல்வீசினர். இவர்களுடன் ஒரு டி.வி.காமராமேனும் வந்திருந்தார். நல்லதொரு காட்சிக்காக காத்திருக்கும் ஊடகங்களுக்கும் கிரிமினல்களுக்குமிடையேயான ஒப்பந்தத்தின் குணம்தான் என்ன?
என்னை ஒழித்துவிடுவோம் என ஆர்.எஸ்.எஸ்ஸும், பஜ்ரங்தள்ளும் வெளிப்படையாக அறிவித்துவிட்டனர். இந்தியா முழுவது என் மீது வழக்கு பதிவுச் செய்யப் போவதாக மிரட்டுகின்றனர். அரசு ஒரு எல்லை வரை முதிர்ச்சியை வெளிப்படுத்தும் பொழுது, நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு சில ஊடகங்களும், ஜனநாயகத்தின் அடிப்படை காரணிகளும் அடிபணிந்துவிட்டதா? என அருந்ததிராய் கேள்வி எழுப்புகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment