Nov 18, 2010

ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது? ஏன்!


மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் உடல்நலன் மற்றும் டயட்(எடை குறைப்பு) சம்பந்தமாக ஆண்கள் சொல்லும் அறிவுரைகள் பெண்களிடம் எப்பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் தேசிய பல்கலைகழகம் நடத்திய ஆய்வின் படி ஒரு உணவை சாப்பிடுவது நல்லதா, தப்பா என்பது போன்ற உணவு பழக்கங்கள், உடல் எடை குறைப்பது அல்லது அதிகரிப்பது போன்ற டயட் ஆலோசனைகளை ஆண்கள் சொல்வதை விட பெண்கள் சொல்லும் போது தான் பெண்கள் கேட்பதாக தெரிவித்துள்ளனர்.

டயட் ஆலோசனைகளை ஆணும் பெண்ணும் சொல்லும் குறும் படங்களை பெண்களிடம் போட்டு காண்பித்ததில் ஆண்கள் பேசும் வீடியோக்களை கேட்ட பெண்கள் அதை பின்பற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் அதே சமயத்தில் பெண்கள் பேசும் வீடியோவை கேட்ட பெண்கள் அதில் உள்ள இணைப்புகளை கிளிக் செய்து மேலும் தகவல் பெற்று பின்பற்றுவதில் ஆர்வம் காட்டுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆண்களை ரோல் மாடலாக கருதாமலும், ஆண்களின் அறிவுரைகளை கேட்காததாலும் தான் பெண்கள் ஆபத்தான முறையில் ஓரேடியாக தங்கள் எடையை மாடல்கள், விளம்பர அழகிகள் போன்று குறைத்து கொள்வதாகவும் ஆய்வு தெரிவிக்கின்றது. சுருங்க சொன்னால் ஆண்களுக்காக அல்லாமல் பெண்களுக்காக தான் பெண்கள் உடல் எடையை குறைத்து கொள்கின்றனர் என்பதே அது.

No comments: