
பாகிஸ்தான் அதெல்லாம் நடக்கிற காரியமா, எங்கள் ஆதரவு நாடான சீனா வழியாக நெருக்குதல் கொடுப்போம் என்கிறது.இந்தியாவை பொருத்தமட்டில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமில்லாத உறுப்பினராக பதவியேற்கிறது. இரண்டாண்டுகள் இந்த பதவியில் இருக்கும். இந்த இரண்டாண்டு காலத்திற்குள் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்வதற்கும், நிரந்தரமாக இடம் பிடிப்பதற்கும் வேகமாக முயற்சிக்கும் என்று இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய குழுவில் இடம் பெற்றுள்ள ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், "நாங்கள் பாதுகாப்பு கவுன்சிலில் 19 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் நுழைகிறோம். பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து வெளியேற எங்களுக்கு எண்ணம் இல்லை. நிரந்தரமில்லாத உறுப்பினராக இருக்கும் இரண்டாண்டு காலத்திற்குள் நிரந்தர உறுப்பினர் இடத்தை இந்தியா பிடிக்கும்' என்றார். அமெரிக்க தூதரக அதிகாரி சூசன் ரைஸ் கூறுகையில், "இது சிக்கலானது, நீண்ட நாள் இழுக்கக்கூடிய பிரச்னை. இதில் நியூயார்க் நடவடிக்கை சுமாராகத்தான் இருக்கும். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளனர். அவர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வருவது சிரமமான காரியம்' என்று அமெரிக்க தூதரக அதிகாரி சூசன் ரைஸ் கூறினார்.
No comments:
Post a Comment