கொழும்பு, நவ.9- இலங்கையில் விடுதலைப் புலிகள் மீண்டும் போரை தொடங்க முடியாது என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.போருக்குப் பின்னர் பெரும்பாலான நாடுகளில் ஏற்படக்கூடிய சிறு ஆயுதக் கிளர்ச்சி போன்ற நிலைமை இலங்கையில் ஏற்படவில்லை என்றும், தொலைநோக்குடன் செயல்பட்டதால் அத்தகைய ஆபத்துகளை தவிர்க்க முடிந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.மேலும், இலங்கை அரசுக்கும் நாட்டுக்கும் எதிராக புலிகளின் சர்வதேச வலையமைப்பு பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாகவும் பீரிஸ் கூறினார் என்றும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிந்திக்க: இலங்கையில் மீண்டும் தமிழ்ஈழம் கட்டி அமைக்கபடும். உலகில் எந்த நாட்டிலும் அந்த நாட்டின் மக்களின் சுதந்திர தீயை யாரும் ஊதி அணைத்து விட முடியாது. அது போல்தான் இலங்கையிலும், சீக்கிரம் இந்தியாவிலும். தனி தமிழ் நாடு நமது லேட்சியம் என்று உயிர் துறந்த மாவிரர்களின் தியாகங்கள் வீண் போகிவிடாது. என்று ஒரு மக்கள் சுதந்திர நாடு வேண்டும் என்று தீர்மானித்து விட்டார்களோ அதற்க்கு பின்னால் எந்த அடக்கு முறையும் அதை தடுத்து நிறுத்த முடியாது. இலங்கையில் இருந்து தனி தமிழீழம். இந்தியாவில் இருந்து சுதந்திர காஷ்மீர், மற்றும் எதிர் காலத்தில் எத்ததனை நாடுகளோ? காலம் நிச்சயமாக பதில் சொல்லும் ஒருநாள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment