Oct 14, 2010

அசாமில் தண்டவாளம் தகர்ப்பு: போடோ தேசிய விடுதலை முன்னணி பொறுப்பேற்றது.

குவாஹாட்டி, அக். 14: அசாமில் போடோ தேசிய விடுதலை முன்னணி போராளிகள் தண்டவாளத்தை குண்டு வைத்து தகர்த்தனர்; கோக்ரஜார் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.மிகவும் சக்தி வாய்ந்த குண்டை போராளிகள் வெடிக்கச் செய்துள்ளனர். இதனால் கோக்ரஜார் - சாலாகாடி இடையில் சிறிது தொலைவுக்கு ரயில் தண்டவாளம் துண்டு துண்டாக சிதறியது. இதனால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் இருந்து வெடிக்காத குண்டு ஒன்றும் கைப்பற்றப் பட்டுள்ளது. தண்டவாளத்தை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனர்.போடோலாந்து என்று தனிநாடு வேண்டும் என்பது போடோ தேசிய விடுதலை முன்னணி போராளிகளின் முக்கியக் கோரிக்கையாகும்.

No comments: