
ஆமதாபாத், அக். 14: குஜராத் உள்ளாட்சித் தேர்தலின் போது வாக்குப் பதிவு இயந்திரத்தின் மூலம் முறைகேடு நடைபெற்று இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. குஜராத்தில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதனையடுத்து காங்கிரஸ் இவ்வாறு கூறியுள்ளது.இது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் சங்கர் சிங் வகேலா, ஆமதாபாதில் வியாழக்கிழமை கூறியிருப்பது:உள்ளாட்சித் தேர்தலில் மாலை 4 மணிவரை 20 முதல் 25 சதவீதம் வரையிலான வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் அடுத்த ஒருமணி நேரத்தில் மட்டும் 15 முதல் 20 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இது எப்படி சாத்தியமாகும்.
தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் இப்போதுள்ள குஜராத் மாநில பாஜக அரசால் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனத்தால் தயாரித்து வாங்கப்பட்டது. எனவே தங்களுக்கு சாதகமான வகையில் அவற்றை பயன்படுத்தும் வகையில் மாற்றியமைத்துள்ளனர்.
மோடிக்கு மக்கள் ஆதரவளிக்கவில்லை, வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாயம் செய்து தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றார் அவர்.
No comments:
Post a Comment