Oct 14, 2010

ராஜபட்சயை குண்டு வைத்து கொலை செய்ய சதியா?

சேலம், அக். 14: இலங்கை அதிபர் பயங்கரவாதி ராஜபட்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் எங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. இதையடுத்து அந்த அந்த பகுதிகளில் பாதுகாப்புக்கு நின்றிருந்த அரசு பயங்கரவாத படையினர் (போலீஸார்) விரைந்து செயல்பட்டு தீயை அணைத்து உருவ பொம்மைகளை கைப்பற்றினர்.

ஓ! என்ன ஒரு பொறுப்புணர்வு உள்ள அரசு! மெய் செலிர்க்கிறது!. என்ன குற்றத்திற்கு இவர்கள் கைது செய்யபட்டார்கள். இவர்கள் என்ன ? ராஜபட்சவை குண்டு வைத்து கொலை செய்ய முயர்சித்தார்களா? ஏன் இந்த அவலம் இந்த தமிழ் மக்களுக்கு? என்று இதற்க்கு எல்லாம் ஒரு விடிவு ஏற்படும். என்று இந்த தமிழ் மக்கள் விழிப்புணர்வு கொள்வார்கள். தூங்கியது போதும் தமிழர் தேசம் அமைக்க பாடுபடுவோம்.

சிந்திக்க: இவர்களை போல் கேடு கேட்ட அரசாட்சியை எந்த நாட்டிலும் பார்க்க முடியாது. தமிழ் ஈழ மக்களை லெட்ச்ச கணக்கில் கொன்று குவித்த பயங்கரவாதி ராஜபட்ச வரவை முன்னிட்டு தமிழ் நாடு (கோழை) தமிழர்கள் குறைந்தபட்சம் தமிழ் நாட்டில் ஒரு போராட்டத்தையாவது நடத்திவிட்டு போகட்டும் என்று இந்த அரசு பயங்கரவாதிகள் விடுகிறார்களா? அதையும் செய்ய இந்தியாவில் உரிமை இல்லை கேட்டால் ஜனநாயக நாடு என்று கூச்சல் போடுவார்கள். இது ராணுவ ஆட்சி நடக்கும் நாட்டை விட கேவலமா இருக்கு.

மினஞ்சல் பதிவு: உலக தமிழர் பாதுகாப்பு படை.

No comments: