Oct 14, 2010

ஒரிசாவில் பஞ்சாயத்து கட்டடம் மாவோயிஸ்டு போராளிகளால் தகர்ப்பு.

மால்கங்கிரி(ஒரிசா), அக்.14: பாதுகாப்புப் படையினர் தங்குவதற்காக பயன்படுத்திய பஞ்சாயத்து கட்டடம் மற்றும் கோடவுனை மாவோயிஸ்டுகள் வெடிவைத்து தகர்த்தனர்.மால்கங்கிரி கைர்புத் பகுதியில் உள்ள மர்கபதர் கிராமத்தில் ஆயுதம் ஏந்திய 50க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி மூலம் அடுத்தடுத்த 2 கட்டடங்களை தகர்த்தனர். பின்னர் பாதுகாப்புப் படையினருக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியவாறு வனப்பகுதிக்குள் சென்று மறைந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சத்தீஸ்கர் மாநில எல்லைக்கு அருகில் உள்ள மால்கங்கிரி மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் 8 பஞ்சாயத்து கட்டடங்கள், 4 பள்ளிக் கட்டடங்கள் உள்ளிட்ட ஏராளமான அரசு கட்டடங்களை மாவோயிஸ்டுகள் வெடிவைத்து தகர்த்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

No comments: