Oct 12, 2010

வைகோ, மற்றும் பழ. நெடுமாறன் தலைமயில் தனி தமிழ் நாடு.

1983 ஜூலையில் சிங்கள இனவெறி அரசு நடத்திய ஈழத்தமிழினப் படுகொலைக்கு எதிராக தமிழகம் கொந்தளித்தபோது, பல போராளிக் குழுக்கள் ஈழ மண்ணில் தோன்றியபோது. இதில் தலையிட்ட இந்திய அரசு, ஈழத்தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை பெற்றுத்தரும் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொள்வதாக வாக்களித்தது. போராளிக் குழுக்களை இந்திய உளவுத்துறையின் கைப்பாவைகளாகச் சீரழித்து, பின்னர் ஈழத்தை ஆக்கிரமித்து, முடிவில் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவத்துக்கு களத்தில் உடன் நின்று வழிநடத்தியது இந்திய அரசு. ஜூலை படுகொலை நடந்த 26 ஆண்டுகளுக்குப் பின், அம்மக்களின் போராட்டம் முள்ளிவாய்க்கால் படுகொலையும், முட்கம்பி வேலிக்குப் பின்னால் 3 இலட்சம் ஈழத்தமிழ் அகதிகளும் என்று துயரமாக முடிந்தது.

இது அனைத்தும் இந்தியாவின் துரோகத்தால் விழைந்தது. கருணாநீதி போன்ற தமிழ் இன துரோகிகளால் தமிழ் நாட்டில் ஈழதமிழர்களுக்காக நடந்த போராட்டங்களும் முனை மழுங்கி போயின.ஈழ போராட்டத்தில் அங்கிருந்த போராளிகள் குழுக்களுக்கு பிரச்சனைகள் வரும்போது எல்லாம் தமிழகம் அவர்களுக்கு ஆதரவாக இருந்தது. இந்திய அரசு பயங்கரவாதிகள் தமிழக கடற்கரைகளில் ரோந்து கப்பல்களை நிறுத்தி கடைசி கட்ட போரில் போராளிகள் தப்பிக்க முடியாமல், அவர்களுக்கு உதவிகள் போகவிடாமல் தடுத்து தமிழின போராட்டத்தை முழுவதுமாக அழிக்க காரணமாக இருந்தார்கள். ஈழ தமிழர்களின் "தனி தமிழீழம் என்கிற நீண்ட போராட்டத்தை" முடிவுக்கு கொண்டுவந்த அனைத்து பெருமையும் இந்தியாவையே சாரும்.

ஈழ தமிழர்களுக்கு இந்தியா செய்த துரோகத்துக்கு விலையாக தனி தமிழ்நாடு என்கிற போராட்டத்தை முதலில் தமிழகத்தில் இருந்து நாம் தொடங்குவோம் என்பதே தமிழ் மக்களின் ஆவாவாக இருக்கிறது. தனி தமிழ் நாடு என்ற கனவிலே நம் பெரியார் முதல் உள்ள திராவிட கழகத்தின் கொள்கையாக இருந்தது பின்னால் ஓட்டு பொறுக்கி தலைவர்கள் அந்த கனவை மறக்கடித்தார்கள். எனவே நாமும் நம் மூதாதையர் போல் தனி தமிழ் நாடு அமைத்து அதன் மூலம் தனி தமிழீழம் அமைப்போம் வாருங்கள். இதற்க்கு வைக்கோ மற்றும் பழ. நெடுமாறன், திருமாவளவன், சீமான், போன்றவர்கள் முன்வருவார்களா? தமிழ் மக்கள் கேட்கிறார்கள்.

மினஞ்சல் பதிவு: உலக தமிழர் பாதுகாப்பு படை.

4 comments:

Unknown said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்

http://denimmohan.blogspot.com/

raja said...

தனித்தமிழ்நாடு மிக அவசியமான ஒன்றே... ஆனால் அதனை ஆளக்கூடிய ஒரு நேர்மையான தமிழ்த்தலைவர்களை சொல்லுங்கள்.. ? ஒருவருமில்லை என்பது என் கருத்து.. பிரபாகரன் போன்ற தூயதலைவன் தமிழ் நாட்டில் உருவாகாத வரையில் தனித்தமிழ்நாட்டுக்கான வழிமுறைகள் மிக சிரம்மே.. நாம் நமது தமிழதேசியத்தை முன்னோக்கி வளர்க்க தவறவிட்டுவிட்டோம்..அதற்கான காரணத்தையும்,சீரழிவையும் பேசுவோமென்றால் இந்த ஒரு கட்டுரை போதாது.. முதலில் நல்ல தலைவன் தோன்றவேண்டும். மற்றதை பிறகு பார்க்கலாம்.. அது வரை இந்திய பார்ப்பன குடும்ப அரசுகளுக்கு கழிவறை சுத்தம் செய்யும் வேலையை செய்வோம்.

Anonymous said...

very goood

Vijiskitchencreations said...

நல்ல பதிவு. என் முதல் வருகை. raja சொல்வதை தான் நானும் சொல்கிறேன். ம்டுஹலில் நல்ல தலைவன் தோன்ற வேன்டும்.
www.vijisvegkitchen.blogspot.com