Oct 15, 2010

ஹிரோவான சிலி அதிபர்: சீரோவான நம்நாட்டு பிதாமகர்கள்.

சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் மற்றொரு ஹீரோ சிலி அதிபர் ஸெபாஸ்டியன் பினேரா ஆவார். சுரங்கத்தில் தொழிலாளர்கள் சிக்கி உயிருக்கு போராடுகிறார்கள் என்ற தகவல் கிடைத்த நிமிடம் முதல் அவர்களை உயிருடன் மீட்பதற்கான மனிதர்களால் முடிந்த அளவிற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அவர் அறிவித்திருந்தார். தான் கொடுத்த வாக்குறுதியை முழுமையாக பேணிய அதிபர் ஸெபாஸ்டியன் பினேரா சிலி மக்களின் ஹீரோவாக மாறிவிட்டார்.

சிந்திக்க: வாக்குறுதி என்றால் என்ன? என்று கேட்பார்கள் நம்ம பிரதமர்களும், முதலமைச்சர்களும் , ஓ! எத்தனை? எத்தனை? வாக்குறுதிகள் தேர்தல் சமயத்தில். எத்தனை? எத்தனை? விசாரணை கமிஷன்கள். ஒரு போபால் நிகழ்ச்சியே போதும் இவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை சொல்ல. இந்திய திருநாட்டில் பணமுதலைகள் என்ன நினைத்தாலும் செய்யலாம். அதற்க்கு சிறந்த உதாரணம் தான் ஆப்ரேசன் க்ரீன் லேன்ட். போபால் படுகொலை, எத்தனை? மனித உரிமை மீறல்கள், போலி என்கவுண்டர்கள். போலீஸ் மிருகங்கள் நடத்திய எத்தனை? கற்பழிப்புகள் எதற்காவது ஒழுங்கான நீதிவிசாரணை நடத்தி தீர்ப்பு உண்டா? ஓ தீர்ப்பு என்றவுடன் நினைவுக்கு வருகிறது நம்ம நீதிமன்றங்கள் குறித்து. ஓ! எப்படிபட்ட நீதியரசர்கள் இவர்கள் "ஆப்ரேசன் க்ரீன் லேன்ட்" காட்டு வேட்டை காதாநாயகர்கள் ஆச்சே நம்ம நீதிமான்கள், போபால் விசவாய்வு ஹீரோக்கள் ஆச்சே இவர்கள் , பாபர் மசூதி தீர்ப்பின் கண்டுபிடிப்பாளர்கள் ஆச்சே இவர்கள். இந்த அரசு பயங்கரவாதிகளும், ராணுவமும் இலட்ச்ச கணக்கில் ஈழத்தமிழர் படுகொலைகளை நடத்திய உத்தமர்கள் ஆயிற்றே. இதைபற்றி யாராவது பேசினால் தேசதுரோகம் என்று ஆள்தூக்கி சட்டங்கள் பாயும் ஹிடேக் இந்தியா, வல்லரசு இந்தியா, ஜெய் ஹிந்த்.

No comments: