Oct 10, 2010

உலகிலேயே கடவுள் என்று தாங்கள் நம்பும் சிலைகளை தாங்களே திருடும் விந்தை மனிதர்கள்.

ஹூஸ்டன்,அக்.10: அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தில் இருந்து சில சிலைகள் திருடு போயுள்ளன.இது, அமெரிக்காவில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருடிச் சென்ற சிலையை திருப்பி கொடுத்திடுமாறு அந்த கோயில் நிர்வாக செய்தித் தொடர்பாளர் சிராக் பட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிலையை திருப்பி கொடுப்பவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது. ரூ. 2 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.திருடப்பட்ட சிலைகள் அனைத்துமே பித்தளையால் செய்யப்பட்டது. இது திருடர்களுக்கு தெரியவில்லை. சிலைகள் தங்கத்தால் செய்யப்பட்டது என நினைத்து அவர்கள் திருடிச் சென்றுள்ளனர் என்றும் சிராக் பட் தெரிவித்தார். ஹூஸ்டனில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயம் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்துக்கு ஹூஸ்டனில் வசிக்கும் மக்கள் மட்டுமல்லாது அமெரிக்கா முழுவதும் வசிக்கும் இந்திய மக்கள் வந்து வழிபாடு நடத்துகின்றனர்.

1 comment:

ப.கந்தசாமி said...

இது ஒரு பயங்கரக் கொடுமை. மனிதன் ஏன் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறான் என்பது ஒரு புரியாத புதிர்.