Sep 15, 2010

மனித உரிமை ஆர்வலர் என். எம். சித்தீக் விடுதலை.

கொச்சி : மனித உரிமை ஆர்வலரும் சிறந்த எழுத்தாளரான என். எம். சித்தீக் அவர்கள் 52 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். ஜோசப் விவகாரத்தில் பாப்புலர் பிரண்டின் அலுவலகங்கள் சோதனை செயயப்பட்டபோது அலுவலக உதவியாளர் அப்துல் ஸலாமுடன் இவரும் கைது செய்யப்பட்டார் . சோதனையின்போது பொதுமக்களின் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த CD க்கள் புத்தகங்கள் ஆகியவற்றை எடுத்து வைத்துக்கொண்டு சர்ச்சைக்குரிய ஆவணங்கள் குறுந்தகடுகள் கைப்பற்றப்பட்டதாக பரபரப்பான செய்தி வெளியிட்டது காவல்துறை. கடந்த 2 ம் தேதியே பிணை வழங்க உத்தரவிட்ட கேரளா உயர்நீதிமன்றம் 13 தேதிதான் வெளியில் விடவேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துவிட்டது

ஜோசப் தாக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை என்ற பெயரில் முஸ்லிம்களை போலீஸ் வேட்டையாடி வருவதை எதிர்த்து மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்தமைக்கு பழிவாங்கும் எண்ணத்துடன் காவல்துறை கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது . இவர் கொடுத்த புகாரின் பேரில் கேரளா DGP யிடம் விளக்கம் கேட்டுள்ளது மனித உரிமை ஆணையம் .

சிறையிலிருந்து வெளியேறிய அவர் "மனித உரிமைக்காக குரல் கொடுத்த காரணத்தால் எனது உரிமை பறிக்கப்பட்டுள்ளது இனி எனக்காகவும் நான் உரிமை குரல் எழுப்ப வேண்டிய அவலம் . மனித உரிமை ஆர்வலர்களுக்கு இது இக்கட்டான சூழ்நிலையாக உள்ளது குறிப்பாக அரச பயங்கர வாதத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் ஏதாவது காரணத்தை காட்டி சிறையிலடைக்கப்படுகின்றனர்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.Add new commentImage

No comments: