வாஷிங்டன்,செப்.16:ஜிஹாதுத் தொடர்பான மடக்கோலைகளும், ஆயுதங்களும் வைத்திருந்ததாக கைதுச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா பிரச்சாரகர் விஜயகுமார் விடுதலைச் செய்யப்பட்டார்.20 நாள் சிறைவாசத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். மும்பையைச் சார்ந்த விஜயகுமார் ஹிந்துத்துவா அமைப்பான ஹிந்து காங்கிரஸ் ஆஃப் அமெரிக்காவின் தலைமையில் கனடா நாட்டில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்க செல்லும் வேளையில் கடந்த மாதம் 20 ஆம் தேதி ஹூஸ்டனில் ஜார்ஜ் புஷ் சர்வதேச விமானநிலையத்தில் வைத்து கைதுச் செய்யப்பட்டார்.
பாதுகாப்பு சோதனையின் போது விஜயகுமாரின் பையிலிருந்து உளவுவேலைத் தொடர்பாகவும், ஜிஹாதுத் தொடர்பாகவும் சில மடக்கோலைகளும், உருக்கினால் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டன. பின்னர் இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம், விஜயகுமாரின் பாஸ்போர்ட் மற்றும் விசா கண்டெடுக்க உத்தரவிட்டிருந்தது. 'இந்தியாவைச் சார்ந்த இஸ்லாமிய தீவிரவாதி கைது' என விஜயகுமார் கைதுச் செய்யப்பட்டவுடன் சி.என்.என்-ஐ.பி.என் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், விஜயகுமார் ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பைச் சார்ந்தவன் என்பது பின்னர் போலீஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment